close
Choose your channels

ஓவியாவுக்கு ரொம்ப பிடித்தவர் யார்? பிடிக்காதவர் யார்?

Sunday, October 8, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பொதுவாக எந்த நடிகர், நடிகையிடம் பேட்டி எடுத்தாலும் உங்களுக்கு பிடித்த நடிகர் யார்? நடிகை யார்? என்ற கேள்வி இருக்காமல் அந்த பேட்டி முழுமை அடையாது. அதேபோல் சமீபத்தில் எடுக்கப்பட்ட ஓவியாவின் பேட்டியிலும் இந்த கேள்வி கேட்கப்பட்டது. ஆனால் அதற்கு அவர் கூறிய பதில் ஓவியா உண்மையிலேயே வித்தியாசமானவர் தான் என்பதை உறுதி செய்தது. அவர் கூறிய பதில் இதுதான்:

எனக்கு எந்த நடிகரையும் பர்சனலாக தெரியாது. அதனால் அவர் எனக்கு பிடித்தவரா? பிடிக்காதவரா? என்பதை சொல்ல முடியாது. படப்பிடிப்பின்போது ஒருவர் நல்லா பழகினால் அவரை எனக்கு பிடிக்கும். அதற்காக அவர்தான் எனக்கு ரொம்ப பிடித்தவர் என்று கூற முடியாது. பிக்பாஸ் நிகழ்ச்சியின்போது கமல் சாரை எனக்கு ரொம்ப பிடித்தது. ஆனாலும் அவரை பற்றி எனக்கு பர்சனலாக தெரியாது' என்று கூறினார்

அதேபோல் தனக்கு பிடிக்காதவர்கள் குறித்து கூறியபோது, 'எனக்கு இந்த உலகத்தில் பிடிக்காதவர்களே கிடையாது. எல்லோர் மீதும் நான் அன்பு செலுத்துவேன். எனக்கு அதிகமாக கோபம் வரும்படி, என்னை கொலை செய்யும் வகையில் ஒருவர் நடந்து கொண்டாலும் அவர் மீது எனக்கு அந்த சமயத்தில் மட்டும் பிடிக்காது, ஆனால் மறுநாள் நான் அவரை பற்றி மறந்துவிடுவேன்' என்று கூறினார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment