பிக்பாஸ் 2 நிகழ்ச்சியை தொகுத்து வழங்குபவர் யார் தெரியுமா?

  • IndiaGlitz, [Tuesday,October 03 2017]

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 100 நாள் திருவிழா ஒருவழியாக முடிந்துவிட்டது. ஓவியா ஆர்மி, ஓவியா புரட்சி படையினர்களின் எதிர்ப்பையும் மீறி ஆரவ் வெற்றி பெற்றுவிட்டார். இந்த வெற்றி குறித்து சமூக வலைத்தளங்களில் பல்வேறு கருத்துக்கள் பரிமாறி வருகின்றன.

இந்த நிலையில் சத்தமில்லாமல் அந்த டிவி சேனல் பிக்பாஸ் 2 நிகழ்ச்சிக்கான பணிகளை தொடங்கிவிட்டது. முதல் பாகத்தை தொகுத்து வழங்கிய கமல்ஹாசனே இரண்டாம் சீசனையும் தொகுத்து வழங்குவார் என்றே கருதப்பட்டது.

ஆனால் 'இந்தியன் 2' மற்றும் அரசியல் பணிகள் காரணமாக இந்த நிகழ்ச்சியின் இரண்டாம் பாகத்தை தொகுத்து வழங்க கமல் சம்மதிப்பாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த நிலையில் நடிகர் சூர்யாவிடம் சேனல் நிர்வாகிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. ஏற்கனவே இதே சேனல் நடத்திய 'நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி' நிகழ்ச்சியை நடத்தியவர் தான் சூர்யா என்பதால் அவர் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்க ஒப்புக்கொள்வார் என்றே கருதப்படுகிறது.

இருப்பினும் பிக்பாஸ் நிகழ்ச்சியை சீனியர் ஒருவர் தொகுத்து வழங்கினால்தான் சரியாக இருக்கும் என்பது பலரது அறிவுரையாக உள்ளது. அந்தவகையில் சரத்குமார் சரியான தேர்வாக இருக்கும் என்று சமூகவலைத்தளங்களில் கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டு வருகிறது.

More News

ஓவியாவுடன் மீண்டும் இணைய தயார்: ஆரவ்

பிக்பாஸ் நிகழ்ச்சியின் வெற்றியாளரான ஆரவ்வுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வரும் நிலையில் பிரபல ஊடகம் ஒன்றுக்கு ஆரவ் பேட்டி அளித்துள்ளார். இந்த பேட்டியில் அவர் தேவைப்பட்டால் ஓவியாவுடன் இணைய தயார்.

லைகா நிறுவனத்தின் அடுத்த படத்திற்கு 'UA' சான்றிதழ்

தளபதி விஜய்யின் 'கத்தி' உள்பட பல திரைப்படங்களை தயாரித்துள்ள லைகா நிறுவனம் தற்போது சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குனர் ஷங்கர் இயக்கி வரும் பிரமாண்டமான படமான '2.0' படத்தை தயாரித்து வருகிறது.

திலீப் ஜாமீன் மனு: கேரள உயர்நீதிமன்றம் உத்தரவு

பிரபல மலையாள நடிகை ஒருவரை கடத்தி பாலியல் தொந்தரவு செய்வதற்கு மூளையாக செயல்பட்டதாக குற்றஞ்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்ட பிரபல மலையாள நடிகர் திலீப் 86 நாட்களுக்கு பின்னர் ஜாமீன் கிடைத்துள்ளது.

சுற்றுலா பட்டியலில் இருந்து தாஜ்மஹால் நீக்கம்: உபி அரசுக்கு குவியும் கண்டனங்கள்

உலகின் ஏழு அதிசயங்களில் ஒன்றாக உலக மக்கள் அனைவராலும் ஏற்று கொள்ளப்பட்ட தாஜ்மஹாலை சுற்றுலா மையங்களின் பட்டியலில் இருந்து உத்தரபிரதேச அரசு நீக்கியுள்ளது.

சமந்தா திருமணத்தின் பட்ஜெட் எவ்வளவு தெரியுமா?

சமந்தாவுக்கும் தெலுங்கு நடிகர் நாகசைதன்யாவுக்கும் ஏற்கனவே திருமண நிச்சயதார்த்தம் முடிந்த நிலையில் வரும் 6ஆம் தேதி மிகச்சிறப்பாக திருமணம் நடைபெறவுள்ளது.