வித்தியாசமான டாஸ்க், எலிமினேஷனுக்கு புது ரூல்ஸ்: அதிர்ச்சியில் போட்டியாளர்கள்!
Send us your feedback to audioarticles@vaarta.com
பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு போட்டியாக எனக் கருதப்படும் ஜீ டிவியில் ஒளிபரப்பாகும் சர்வைவல் நிகழ்ச்சி தற்போது விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. முதல் நாளிலிருந்தே விறுவிறுப்பாகவும் த்ரில்லாகவும் தொடங்கிய இந்த நிகழ்ச்சியின் முதல் எலிமினேஷன் என்ற நிலையை தற்போது எட்டியுள்ளது.
இன்றைய ப்ரோமோ வீடியோவில் எலிமினேஷன் செய்யப்படுவது யார் என்பது குறித்து டிஸ்கஸ் நடைபெற்று வருகிறது. யாரை எலிமினேஷன் செய்ய வேண்டும் என்பது குறித்து போட்டியாளர்கள் துண்டு சீட்டில் எழுதி குடுவை ஒன்றில் போடுகின்றனர். அதில் குறைவான வாக்கு கிடைத்தவர் தான் எலிமினேஷன் செய்யப்படுவார் என அனைவரும் நினைத்துக் கொண்டிருக்க, நிகழ்ச்சியின் தொகுப்பாளர் ஆன ஆக்சன் கிங் அர்ஜுன், யார் அதிகமாக ஓட்டுகளை பெற்று உள்ளாரோ அவர் தான் இந்த வாரம் எலிமினேஷன் என்று கூறுவது போட்டியாளர்களுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வித்தியாசமான டாஸ்க், எலிமினேஷனுக்கு புதிய ரூல்ஸ் என பார்வையாளர்களுக்கு சுவாரஸ்யம் அதிகரித்துள்ளதால் வரும் வாரங்களில் இந்த நிகழ்ச்சி இன்னும் விறுவிறுப்பாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வாரம் எலிமினேஷன் பட்டியலில் விஜே பார்வதி, இந்திரஜா ஷங்கர், சிருஷ்டி டாங்கே மற்றும் ராம் ஆகியோர் இடம்பெற்றிருக்கும் நிலையில் யார் எலிமினேஷன் செய்யப்படுவார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments