பெண்கள் பாதுகாப்பில் அக்கறை கொண்ட முதல்வர் வேட்பாளர் யார்? கருத்துக் கணிப்பில் அசத்தும் இபிஎஸ்!
- IndiaGlitz, [Saturday,March 06 2021]
வரும் சட்டப்பேரவைத் தேர்தலை ஒட்டி பெண்கள் பாதுகாப்பிற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் முதல்வர் வேட்பாளர் யார் என்ற கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டு உள்ளது. இந்தக் கருத்துக் கணிப்பில் பொதுமக்களின் ஆதரவு பெற்ற முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி முன்னிலை வகிக்கிறார்.
அதிமுக சார்பில் நேற்று முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. 6 பேர் போட்டி இடுவதற்கான இந்த வேட்பாளர் பட்டியலில் எடப்பாடி பழனிசாமி அவர்கள் தொடர்ந்து 5 ஆவது முறையாக எடப்பாடி சட்டப்பேரவை தொகுதியில் நிற்பதை உறுதிப்படுத்தி இருந்தார். இதையடுத்து பெண்களின் பாதுகாப்பு குறித்த விவாதமும் பொதுமக்கள் மத்தியில் வைக்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில் பெண்களின் பாதுகாப்புக்கு கடந்த 2018 டிசம்பரில் 118 என்ற இலவச தொலைப்பேசி திட்டத்தை ஏற்படுத்தியது மற்றும் இரவு நேரத்தில் தனியாகச் செல்லும் பெண்கள் போலீசாரை அழைப்பதற்கு தனி அலைபேசி என்ற எனப் பல தரவுகளையும் பொதுமக்கள் எடுத்துக் கூறி வருகின்றனர். அதோடு முதல்வராக பதவி வகித்த எடப்பாடி பழனிசாமி, சாதாரண குடும்பத்தில் இருந்து முதல்வராக உயர்ந்தவர். அவர் மக்களுடைய நிலைப்பாட்டை உணர்ந்து இருந்தார். அதனால் பெண்களின் பாதுகாப்பு ஏற்ற நடவடிக்கைகளை தொடர்ந்து முன்னெடுத்து வருகிறார் எனப் பொது மக்கள் பலரும் அவருக்கு ஆதரவு தெரிவித்து இருந்தனர்.