டி20 இந்தியக் கிரிக்கெட் அணிக்கு அடுத்த கேப்டன் யார்? கசிந்த ரகசியம்!
Send us your feedback to audioarticles@vaarta.com
டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் போட்டிகள் தற்போது துவங்கியுள்ளது. இந்தத் தொடரின்போது இந்திய டி20 கிரிக்கெட் அணிக்கு கேப்டனாக விராட் கோலி, மெண்டராக மகேந்திர சிங் தோனி, பயிற்சியாளராக ரவி சாஸ்திரி ஆகியோர் செயல்படுகின்றனர்.
ஆனால் விராட் கோலி டி20 உலகக்கோப்பை தொடருக்குப்பின் டி20 அணிக்கான கேப்டன்சி பதவியில் இருந்து விலகிவிடுவதாக தெரிவித்து இருந்தார். இதையடுத்து அடுத்த கேப்டன் யார்? என்ற ஆர்வம் இப்போதே ரசிகர்களிடம் தொற்றிக் கொண்டுவிட்டது. இந்நிலையில் தற்போது துணை கேப்டனாக இருக்கும் ரோஹித் சர்மா டி20 அணிக்கு அடுத்த கேப்டனாக நியமிக்கப்படுவதற்கு வாய்ப்பு இருப்பதாக ரசிகர்கள் கூறிவந்தனர்.
சமீபத்தில் இதுகுறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்ற நிலையில் ரோஹித் சர்மா டி20 இந்தியக் கிரிக்கெட் அணிக்கு கேப்டனாக நியமிக்கப்படுவார் என்று பிசிசிஐ அதிகாரி ஒருவர் தகவல் தெரிவித்துள்ளார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு டி20 உலகக்கோப்பை தொடர் முடிவுற்ற பின்பு அறிவிக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் டி20 அணியின் துணை கேப்டன் யார்? என்பதற்கான அடுத்த கேள்வியையும் ரசிகர்கள் எழுப்பி வருகின்றனர். இந்தப் பதவியில் கே.எல்.ராகுல் நியமிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. அதேநேரத்தில் ரிஷப் பந்தின் பெயரும் அடிபடுகிறது. இதனால் துணைக் கேப்டன் யார் என்பதை கணிக்க முடியாத நிலைமை ஏற்பட்டு இருக்கிறது.
ஆனால் கேப்டன் பதவியில் ரோஹித் சர்மா நியமிக்கப்படுவார் என்பதற்கான அஸ்திவாரம் இன்றே துவங்கிவிட்டது. காரணம் டி20 உலகக்கோப்பை தொடருக்கான இரண்டாவது பயிற்சி ஆட்டம் ஆஸ்திரேலியாவிற்கு எதிராக நடைபெற்றது. இந்தப் பயிற்சி ஆட்டம் ரோஹித் சர்மா தலைமையில் நடைபெற்றதும் குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout