கைதான தமிழ்கன் அட்மினின் காமக்கதைகள்
Send us your feedback to audioarticles@vaarta.com
நடிகர் சங்க செயலாளர் மற்றும் தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷாலின் தீவிர முயற்சியால் தமிழ்கன் அட்மின் கெளரிசங்கர் நேற்று கைதானார் என்பது தெரிந்ததே. இவர் தமிழ்கன் இணையதளத்திற்கு மட்டுமின்றி மேலும் 33 இணையதளங்களுக்கு தொடர்புள்ளவர் என்றும் அவற்றில் ஒருசில இணணயதளங்கள் ஆபாச இணையதளங்கள் என்றும் விசாரணையில் தெரியவந்துள்ளது. அந்த இணையதளங்களில் ஒன்று ஆண்ட்டிகாமக்கதைகள்.காம் என்பது குறிப்பிடத்தக்கது
திரையுலகினர்களின் பிழைப்பில் மண் போடுவது மட்டுமின்றி சமூகத்தை சீரழிக்கும் ஆபாச இணையதளங்களுக்கும் இவருக்கு தொடர்பு உண்டு என்ற தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பணம் சம்பாதிக்க எத்தனையோ வழிகள் இருக்கும் நிலையில் இதுபோன்று சமூகத்தை சீரழிக்கும் வகையில் ஆபாச இணையதளங்கள் மூலம் பணம் சம்பாதிக்கும் இவர் போன்ற நபர்கள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் இதுபோன்ற சமூகநல அக்கறையில்லாதவர்களை களையெடுக்கும் பணியை தொடங்கியுள்ள விஷாலுக்கு பாராட்டுக்களை தெரிவித்து கொள்வதோடு மேலும் இந்த பணி தொடர வாழ்த்துக்களையும் தெரிவித்துகொள்கிறோம்
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Contact at support@indiaglitz.com
Comments