பிக்பாஸ் 2: செண்ட்ராயன் அடுத்த தலைவரா? வெளியேறுவது யார்?
Send us your feedback to audioarticles@vaarta.com
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட 16 பேர்களில் முதல் நபராக நேற்று வெளியேறினார் மமதி. இவர் வெளியேறுவார் என்று பார்வையாளர்கள் எதிர்பார்த்ததுதான். ஆனால் வீட்டில் உள்ள மற்றவர்கள் அனந்து வெளியேறுவார் என்று நினைத்தனர்.
இந்த நிலையில் இந்த வாரம் வீட்டை விட்டு வெளியேறும் நபர் யார்? என்பது குறித்த நாமினேஷன் இன்று நடக்கவுள்ளது. கடந்த வாரம் கொடுக்கப்பட்ட டாஸ்க்கில் டேனியல் சிறப்பாக செயல்பட்டதால் அவரை நாமினேட் செய்ய முடியாது. அதேபோல் இந்த வார தலைவராக செண்ட்ராயன் தேர்வு செய்யப்பட்டுள்ளதால் அவரையும் யாரும் நாமினேட் செய்யவில்லை. கடந்த வார டாஸ்க்கில் நித்யா மோசமாக வேலை செய்ததால் அவர் நேரடியாக நாமினேஷனில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இதுகுறித்த புரமோ வீடியோவில் டேனியல் மும்தாஜையும், மும்தாஜ் ஜனனியையும் ஜனனி மும்தாஜையும், வைஷ்ணவி மகத்தையும் நாமினேட் செய்கின்றனர். மும்தாஜும் ஜனனியும் ஒருவரை ஒருவர் நாமினேஷன் செய்தது இறுதிவரை செல்வதில் இருவருக்கும் சரியான போட்டி இருக்கும் என்பதால் இருக்கலாம். இருப்பினும் இன்று இரவுதான் யார் யார் நாமினேஷனில் உள்ளனர் என்பது தெரியவரும்
#பிக்பாஸ் இல்லத்தில் இன்று.. #BiggBossTamil - தினமும் இரவு 9 மணிக்கு உங்கள் விஜயில்.. #VivoBiggBoss @Vivo_India pic.twitter.com/0qa7RvKKak
— Vijay Television (@vijaytelevision) July 2, 2018
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments