யார் இந்த பிங்கி லால்வானி? விஜய் மல்லையாவின் 3வது மனைவியா?
Send us your feedback to audioarticles@vaarta.com
பிரபல தொழிலதிபர் விஜய் மல்லையா இந்திய வங்கிகளில் ரூ.9000 கோடி கடன் பெற்றுவிட்டு அதை திருப்பி செலுத்தாமல் லண்டனுக்கு தப்பி சென்ற நிலையில் தற்போது அவர் பிங்கி லால்வானி என்ற இளம்பெண்ணை மூன்றாவது திருமணம் செய்து கொள்ளவிருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. யார் இந்த பிங்கி லால்வானி?
62 வயதாகும் விஜய் மல்லையாவையை திருமணம் செய்ய போவதாக கூறப்பபடும் பிங்கி லால்வானிக்கு 39 வயதுதான். . பிங்கி லால்வானி விஜய் மல்லையாவுக்கு சொந்தமான கிங் பிஷர் ஏர்லைன்ஸில் ஏர் ஹோஸ்ட்ரஸாக பணிபுரிந்துள்ளார். அதன் பின்னர் விஜய் மல்லையாவுடன் நெருக்கமாகி கடந்த மூன்று ஆண்டுகளாக அவருடன் லிவிங் டுகெதர் உறவில் இருந்துள்ளார். சமீபத்தில் மூன்றாவது ஆண்டு விழாவை இவர்கள் கொண்டாடியதாகாவும் தகவல்
வங்கி கடன் காரணமாக இந்தியாவில் இருந்து லண்டன் சென்ற விஜய் மல்லையாவுடன் பிங்கி லால்வானியும் உடன் சென்றுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் லண்டனில் வழக்கு விசாரணையின்போதும் விஜய் மல்லையா உடன் லால்வானி இருந்து அவருக்கு ஆதரவாக இருந்ததாகவும் கூறப்படுகிறது. மேலும் லண்டனில் ஒருசில பொது நிகழ்ச்சிகளிலும் பிங்கி விஜய் மல்லையாவுடனே இருந்ததற்கான புகைப்படங்களும் இருப்பதாக சில உறுதிபடுத்தப்பட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
விஜய் மல்லையா ஏற்கனவே சமீரா என்பவரை திருமணம் செய்து அவரை விவாகரத்து செதார். பின்னர் ரேகா என்ற பெண்ணை திருமணம் செய்தார். இரு மனைவிகளின் மூலம் அவருக்கு சித்தார்த், லியான்னா, தன்யா ஆகிய மூன்று குழந்தைகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Contact at support@indiaglitz.com