'முல்லை' கேரக்டருக்கு வேறொருவரா? நடிகை சரண்யா விளக்கம்!
Send us your feedback to audioarticles@vaarta.com
பாண்டியன் ஸ்டோர் தொலைக்காட்சி தொடரில் முல்லை என்ற கேரக்டரில் நடித்துக் கொண்டிருந்த விஜே சித்ரா திடீரென கடந்த 9ஆம் தேதி தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டதை அடுத்து அந்த கேரக்டரில் அடுத்து யார் நடிப்பார் என்ற கேள்வி எழுந்துள்ளது.
இந்த நிலையில் சமூக வலைதளங்களில் முல்லை கேரக்டரில் நடிகை சரண்யா நடிக்க இருப்பதாக செய்திகள் வெளிவந்து கொண்டிருப்பதை அடுத்து அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இது குறித்து விளக்கமளித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது:
"'பாண்டியன் ஸ்டோர்ஸ்' தொடரில் முல்லை கதாபாத்திரத்தில் வேறு ஒரு நடிகை நடிக்கவிருப்பதாக செய்திகள் வெளியாகி வருகின்றன. அது உண்மையல்ல. முல்லை கேரக்டரில் வேறு ஒரு நடிகையை மாற்றுவதில் எனக்கு நம்பிக்கையில்லை. தன்னுடைய நிறைவான நடிப்பினால் முல்லையாகவே சித்ரா அங்கீகாரம் பெற்றுவிட்டார். அது எப்போதும் மக்கள் மனதிலேயே இருக்க வேண்டும் என்றே நான் விரும்புகிறேன்’ என்று கூறியுள்ளார். மேலும் அது அப்படியே இருக்க வேண்டும் என விரும்புகிறேன்".
இருப்பினு முல்லை கேரக்டரில் நடிக்கும் நடிகையை பாண்டியன் ஸ்டோர்ஸ் தொலைக்காட்சி தொடரின் குழுவினர் தேர்வு செய்துவிட்டதாகவும் விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளிவரும் என்றும் கூறப்படுகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com