பிக்பாஸ் வீட்டில் கவின் கேர்ள்பிரண்ட் யார்?
Send us your feedback to audioarticles@vaarta.com
இந்த முறை பிக்பாஸ் வீட்டின் பிளேபாய் கவின் தான் என்பது முதல் நாளே தெரிந்துவிட்டது. தர்ஷன், சாண்டி, முகன்ராவ், என இளைஞர் கூட்டம் அதிகம் இருந்தாலும், இளம்பெண்களின் பார்வை கவினிடம் மட்டுமே உள்ளது. இதில் அபிராமி ஒப்பனாக தான் கவினை காதலிப்பதாகவே சொல்லிவிட்டார். கவின் அதனை நாகரீகமாக மறுத்துவிட்டாலும் போக போக கவின் மனம் மாற வாய்ப்பு உள்ளது
இந்த நிலையில் இன்று கவின் தனது கேர்ள் பிரண்ட் இடம் 'வாயை மூடி மெளனமாகவே' பேச வேண்டும் என்ற டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. ஷெரின், அபிராமி, சாக்சி, ரேஷ்மா, லாஸ்லியா மற்றும் வனிதா ஆகிய ஒருவரை கவின் கேர்ள் பிரண்டாக தேர்வு செய்து அவரிடம் இன்று முழுவதும் அவர் சைகையால் மட்டுமே பேச வேண்டும். கவின் தனது கேர்ள் பிரண்டாக யாரை தேர்வு செய்வார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்
எல்லாம் ஓகேதான் ஆனால் இந்த லிஸ்ட்டில் வனிதா பெயர் எப்படி வந்தது என்பதுதான் புரியாத புதிராக உள்ளது. பிக்பாஸின் திருவிளையாடல்களில் இதுவும் ஒன்றா?
வாயை மூடி பேசவும்..! ????#பிக்பாஸ் - தினமும் இரவு 9:30 மணிக்கு உங்கள் விஜயில்.. #BiggBossTamil #BiggBossTamil3 #VijayTelevision pic.twitter.com/59mM7dGcmp
— Vijay Television (@vijaytelevision) June 27, 2019
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout