பிக்பாஸ் வீட்டில் கவின் கேர்ள்பிரண்ட் யார்?

இந்த முறை பிக்பாஸ் வீட்டின் பிளேபாய் கவின் தான் என்பது முதல் நாளே தெரிந்துவிட்டது. தர்ஷன், சாண்டி, முகன்ராவ், என இளைஞர் கூட்டம் அதிகம் இருந்தாலும், இளம்பெண்களின் பார்வை கவினிடம் மட்டுமே உள்ளது. இதில் அபிராமி ஒப்பனாக தான் கவினை காதலிப்பதாகவே சொல்லிவிட்டார். கவின் அதனை நாகரீகமாக மறுத்துவிட்டாலும் போக போக கவின் மனம் மாற வாய்ப்பு உள்ளது

இந்த நிலையில் இன்று கவின் தனது கேர்ள் பிரண்ட் இடம் 'வாயை மூடி மெளனமாகவே' பேச வேண்டும் என்ற டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. ஷெரின், அபிராமி, சாக்சி, ரேஷ்மா, லாஸ்லியா மற்றும் வனிதா ஆகிய ஒருவரை கவின் கேர்ள் பிரண்டாக தேர்வு செய்து அவரிடம் இன்று முழுவதும் அவர் சைகையால் மட்டுமே பேச வேண்டும். கவின் தனது கேர்ள் பிரண்டாக யாரை தேர்வு செய்வார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

எல்லாம் ஓகேதான் ஆனால் இந்த லிஸ்ட்டில் வனிதா பெயர் எப்படி வந்தது என்பதுதான் புரியாத புதிராக உள்ளது. பிக்பாஸின் திருவிளையாடல்களில் இதுவும் ஒன்றா?