அடுத்த முதல்வர் யார்? சர்வேயில் முன்னிலை வகிக்கும் எடப்பாடி பழனிசாமி!
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழகச் சட்டச்சபை தேர்தலையொட்டி அரசியல் களம் களைக்கட்டி வருகிறது. இந்நிலையில் தனியார் நிறுவனம் ஒன்றினால் நடத்தப்பட்ட சர்வே முடிவுகளில் விரும்பப்படுகிற முதல்வர் பிரிவில் 40% வாக்குகளை பெற்று எடப்பாடி பழனிசாமி முன்னிலை வகிக்கிறார். அதேபோல இத்தேர்தலில் அதிமுகவிற்கு 44.1% வாக்குகள் கிடைக்கும் என்றும் இதனால் அதிமுக 128 இடங்களில் வெற்றிப் பெற்று மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்கும் என்றும் அந்த சர்வே முடிவு தெரிவித்து இருக்கிறது.
தமிழகச் சட்டபேரவை தேர்தலையொட்டி தமிழகத்தின் முக்கியக் கட்சிகளான அதிமுக, திமுக இரண்டும் சூறாவளி பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகின்றன. இந்நிலையில் இத்தேர்தலையொட்டி இருகட்சித் தலைவர்களும் சில விமர்சனங்களையும் சந்தித்து வருகின்றனர். அதில் தற்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, நேரடியாக முதல்வர் வேட்பாளராகத் தேர்ந்தெடுக்கப் படாதவர் என்ற விமர்சத்தை எதிர்கொண்டு வருகிறார். அதோடு அதிமுக கட்சியில் டிடிவி தினகரன் மற்றும் சசிகலாவினால் பிளவுகள் வரப்போகிறது, மேலும் கட்சிக்குள் இருந்துக் கொண்டே ஓபிஎஸ் எதிராக செயல்படுகிறார் எனப் பல குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் குடும்பச்சொத்து தொடர்பாக திமுக மீது இருக்கும் விமர்சனங்கள், அழகிரியின் அச்சுறுத்தல்கள் என திமுக தலைவர் ஸ்டாலினும் சில விமர்சனங்களை எதிர்கொள்ள வேண்டி இருக்கிறது. இத்தகைய நெருக்கடியான நிலைமையை அடுத்து தனியார் நிறுவனம் ஒன்று அடுத்த முதல்வர் யார்? என்ற சர்வே கணக்கை எடுத்து இருக்கிறது.
இதற்காக முதலில் அமைச்சர்களின் தொகுதி, அடுத்து மு.கருணாநிதி, செல்வி ஜெயலலிதா, காமராஜர், எம்.ஜி.ஆர் போன்றோரின் தொகுதிகள் எனத் தொடர்ந்து தமிழகத்தின் அனைத்துத் தொகுதிகளிலும் வாக்கெடுப்புகள் நடத்தப்பட்டு தற்போது முடிவுகள் அறிவிக்கப்பட்டு உள்ளன.
அந்த வகையில் உங்க ஓட்டு யாருக்கு? எதுக்காக அவருக்கு ஓட்டு போடுறீங்க? எதுக்காக கட்சியை புறக்கணிக்கிறீங்க? உங்கள் தொகுதியில் இருக்கிற முக்கியமான பிரச்சனை என்ன? ஆளுங்கட்சி மீது இருக்கும் அபிப்ராயங்கள் என்னென்ன? ஆளுங்கட்சி மீது இருக்கும் அதிருப்தி என்ன? எடப்பாடி பழனிசாமியின் ஆட்சி எப்படி இருக்கு? ஸ்டாலினை நீங்கள் நம்புகிறீர்களா? திமுக வந்தால் நல்லது நடக்கும் என்று நம்புகிறீர்களா? புதிய அரசிடமிருந்து எதை எதிர்ப்பார்க்கிறீர்கள்? என்பன உள்ளிட்ட பல்வேறு கேள்விகள் எழுப்பட்டன.
அந்த வாக்கெடுப்பில் முதியவர்கள் பெரும்பாலும் காலம் காலமாக தாங்கள் பங்கு வகிக்கும் கட்சிக்கே ஓட்டுப் போட விரும்புவதாகத் தெரிவித்து உள்ளனர். அடுத்து அதிமுக ஆட்சி நன்றாக இருக்கிறது என்று 33% பேரும் மிகச் சிறப்பாக இருக்கிறது என்று 7% பேரும், சுமார் என்று 21% பேரும், சரியாக இல்லை என்று 2.8% பேரும் வாக்களித்து உள்ளனர். அதேபோல அதிமுகவிற்கு ஆதரவு தெரிவித்து 44.1% பேர் கருத்துத் தெரிவித்து உள்ளனர். திமுகவிற்கு 42.8% பேர் வாக்களித்து உள்ளனர்.
மேலும் நாம் தமிழர் கட்சிக்கு 3.7% பேரும் அமமுக கட்சிக்கு 2.8% பேரும் மக்கள் நீதிமய்யம் கட்சிக்கு 2% பேரும் ஆதரவு தெரிவித்து இருப்பது இந்த சர்வே முடிவில் தெரியவந்துள்ளது. இதனால் தமிழகத்தில் அதிமுக கட்சி 128 இடங்களில் வெற்றிப்பெற்று 3 ஆவது முறையாக ஆட்சி அமைக்கும் என்றும் திமுகவிற்கு 100 இடங்களில் மட்டுமே வெற்றிக் கிடைக்கும் என்றும் கூறப்பட்டு உள்ளது.
இந்த சர்வேயில் முக்கியமாக அடுத்த முதல்வர் யார் என்ற கேள்வியில் 41% பேர் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு தெரிவித்து உள்ளனர். அதேபோல 40% பேர் ஸ்டாலினுக்கு ஆதரவு தெரிவித்து உள்ளனர். சீமானுக்கு 3% மும் டிடிவி தினகரனுக்கு 3.2% மும் ஆதரவு கிடைத்து இருக்கிறது. மேலும் இந்த சர்வே முடிவின்படி இளைஞர்கள் பலர் சீமான் மற்றும் நடிகர் கமல்ஹாசனுக்கு ஆதரவு தெரிவிப்பதும் தெரியவந்துள்ளது.
இன்னும் சட்டப்பேரவை தேர்தலில் கூட்டணி பங்கீடு, தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தைகள் எதுவும் நடைபெறாத நிலையில் இந்த சர்வே முடிவு வெளியாகி இருக்கிறது. மேலும் கூட்டணி பங்கீடு வெளியாகும்போது முடிவுகளில் மாற்றம் ஏற்படும் என்றும் கருதப்படுகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com