பிக்பாஸ் வீட்டை விட்டு இன்று வெளியேறுவது யார்?
Send us your feedback to audioarticles@vaarta.com
பிக்பாஸ் வீட்டில் இருந்து ஒவ்வொரு வாரமும் ஒரு போட்டியாளர் வெளியேறி வரும் நிலையில் இந்த வார எவிக்சன் பட்டியலில் ஐஸ்வர்யா, மும்தாஜ், ரித்விகா மற்றும் விஜயலட்சுமி உள்ளனர். கடந்த வாரமே ஐஸ்வர்யா வெளியேறி இருக்க வேண்டும் என்று செய்திகள் வெளிவந்த நிலையில் யாருமே எதிர்பாராத சென்றாயனை மக்கள் வாக்குகளுக்கு எதிராக பிக்பாஸ் வெளியேற்றினார்.
இந்த வாரம் முழுவதும் பிக்பாஸ் 1 போட்டியாளர்கள் ஐஸ்வர்யாவை நல்லவர் என்று நிரூபிக்க அதிக ஆர்வத்துடன் இருந்தனர். ஒருவேளை பிக்பாஸ் அவர்களுக்கு கொடுத்த ரகசிய டாஸ்க்காக கூட இருக்கலாம். ஐஸ்வர்யா மீது சக போட்டியாளர்களும், கமல்ஹாசன் உள்பட பெரும்பான்மையான பார்வையாளர்களும் அதிருப்தியில் உள்ள நிலையில் இந்த வாரமும் ஐஸ்வர்யா காப்பாற்றப்பட அதிக வாய்ப்பு உள்ளது.
நியாயமாக மக்களின் வாக்குகள்படி என்றால் ஐஸ்வர்யாதான் வெளியேற வேண்டும். ஏனெனில் அதிகாரபூர்வமற்ற பிக்பாஸ் இணையதளத்தில் இதுவரை ஐஸ்வர்யா 16.3% வாக்குகள் பெற்று கடைசி இடத்தில் உள்ளார். 41.98% வாக்குகள் பெற்று ரித்விகா முதலிடத்தில் உள்ளார். சமூக இணையதளங்களில் பதிவான பெரும்பான்மையான வாக்குப்போட்டியிலும் ஐஸ்வர்யா பின் தங்கியே உள்ளார். எனவே இந்த வாரம் ஐஸ்வர்யா வெளியேற்றப்படாவிட்டால், கமல்ஹாசனிடம் பிக்பாஸ் இன்னொரு கிராப் கொடுத்து விளக்கம் அளிக்க செய்வார் என்றே எதிர்பார்க்கப்படுகிறது
இந்த நிலையில் ஜனனி நேரடியாக இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுவிட்டதால் இன்னும் இறுதிப்போட்டிக்கு செல்லும் மூன்று போட்டியாளர்கள் யாராக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. நிச்சயம் இறுதிப்போட்டியில் ரித்விகாவும், யாஷிகாவும் தகுதி பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதால் இன்னும் ஒருவர் யார் என்பதுதான் இப்போதைய கேள்வியாக உள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com