5 பெண் போட்டியாளர்களில் நாமினேஷனில் இருந்து தப்பியது யார்? ஆழ்ந்த ஆலோசனை..!

  • IndiaGlitz, [Friday,October 25 2024]

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில், நாமினேஷன் ஃப்ரீ டாஸ்க்கில் பெண்கள் அணி வெற்றி பெற்றுள்ளது. இதனால் நாமினேஷனில் உள்ள பெண்களில் ஒருவரை காப்பாற்றுமாறு பிக் பாஸ் அறிவிக்கிறார். இந்த வாரம் நாமினேஷனில் ஜாக்லின், பவித்ரா ஜனனி, சௌந்தர்யா, தர்ஷா, மற்றும் அன்சிதா என ஐந்து பெண்கள் இருப்பதால், இவர்களை யாரை காப்பாற்றுவது என ஆழ்ந்த ஆலோசனை நடைபெற்று வருகிறது.

நீங்கள் வேறு யாருக்காவது கொடுத்துக் கொள்ளுங்கள், இன்னொரு வாரம் நான் இங்கே இருக்க வேண்டும் என்று மக்கள் முடிவு செய்தால் அது நடக்கட்டும், என்று ஜாக்குலின் போட்டியிலிருந்து ஒதுங்குகிறார்.

என்னுடைய மைனஸ் என்னவெல்லாம் சொல்றாங்களோ, அதை எல்லாம் மாற்றி, நான் இந்த வாரம் நல்லபடியாக தான் போய்க்கொண்டிருக்கிறேன்; எனவே எனக்கு அந்த வாய்ப்பை கொடுங்கள், என்று தர்ஷா கூறுகிறார். எல்லாமே 100 சதவீதம் நன்றாக தான் நான் சென்று கொண்டிருக்கிறேன்; ஆனால் ஏன் தப்பாகிறது என எனக்கே தெரியவில்லை, என்று தனக்காக பவித்ரா ஜனனி வாதாடுகிறார்.

எல்லா வாரமும் மக்கள் சேவ் பண்ணுகிறார்கள் என்று கிடையாது; டீமுக்காக எனக்கு ஃபுல் முயற்சி போட்ட மாதிரி இல்லை என்று தன்னுடைய தவறை சௌந்தர்யா ஒப்புக்கொள்கிறார். நான் எதா இருந்தாலும் சந்திக்க தயார் என்று அன்ஷிதா கூறுகிறார்.

இதனை அடுத்து மீதம் உள்ள நான்கு பெண்கள், சுனிதா, சாச்சனா, தர்ஷிகா, மற்றும் ஆனந்தி ஆகியோர், யாரை காப்பாற்றுவது என்று ஆழ்ந்த ஆலோசனை செய்து அதன் முடிவுகளை அறிவிக்கப் போகும் நிலையில் புரமோ வீடியோ முடிவுக்கு வருகிறது.

எனவே இன்றைய எபிசோடில் பெண்கள் டீமில் நாமினேஷனில் இருந்து சேவ் செய்யப்பட்டவர் யார் என்பது தெரியவரும் என்பதால் எதிர்பார்ப்பு அதிகம் ஏற்பட்டுள்ளது.

More News

உலகமே உற்று நோக்கும் வகையில் வெற்றியை கொண்டாடுவோம்: தொண்டர்களுக்கு விஜய் கடிதம்..!

விஜய்யின் தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநாடு அக்டோபர் 27ஆம் தேதி விக்கிரவாண்டியில்  நடைபெறவிருக்கும் நிலையில் தொண்டர்களுக்கு விஜய் கடிதம் எழுதியுள்ளார்.  இந்த கடிதத்தில் கூறியிருப்பதாவது:

நூல் விட்டே நாமினேஷன் ஃப்ரீ பாஸை பெற்ற பெண்கள் அணி.. வழக்கம் போல் சொதப்பிய ஆண்கள்..!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் நிலையில் இன்று 19வது நாளுக்கான ப்ரோமோ வீடியோ சற்றுமுன் வெளியாகியுள்ளது

கேம்பிரிட்ஜ் பல்கலையில் படிக்க விருப்பப்படும் இளைஞர்.. ஜியோ ஹாட்ஸ்டார் டொமைன் உதவுமா?

ஜியோ மற்றும் டிஸ்னி ஹாட்ஸ்டார் அதிகாரப்பூர்வமாக இணைந்துள்ள நிலையில், இதை முன்கூட்டியே கணித்த டெக் வல்லுனர் ஒருவர் ஜியோஹாட்ஸ்டார் டொமைனை வாங்கியிருப்பதாகவும்,

சிம்பு - அஸ்வத் மாரிமுத்து படத்தில் 'கோட்' நாயகியா? இயக்குனர் அளித்த விளக்கம்..!

சிம்பு நடிப்பில் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் உருவாக இருக்கும் திரைப்படத்தில் 'கோட்' படத்தின் நாயகி நாயகியாக நடிக்க போவதாக சமூக வலைத்தளங்களில் செய்திகள் வெளியாகி

இதுபோன்றதொரு ஊரை தமிழ்த் திரைப்படங்களில் பார்த்ததில்லை. சுரேஷ் காமாட்சி வாழ்த்து..!

இயக்குனர் மீரா கதிரவன் இயக்கும் அடுத்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ள நிலையில் இந்த படத்தில் உள்ள மனிதர்கள் மற்றும் ஊரை இதுவரை நான் திரைப்படங்களை