இந்த வாரம் எலிமினேஷன் யார்? போட்டியாளர்களின் கணிப்பு இதுதான்..!

  • IndiaGlitz, [Thursday,October 10 2024]

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி, இன்று நான்காவது நாளாக நடைபெறும் நிலையில், இன்றைய முதல் புரோமாவில் இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறப்போகும் போட்டியாளர் யார் என்ற கணிப்பை ஒவ்வொரு போட்டியாளரும் தெரிவிக்கின்ற காட்சிகள் இடம் பெற்றுள்ளன.

பிக் பாஸ் வீட்டில் இருந்து மக்கள் இந்த வாரம் வெளியேற்ற போவது கேர்ள்ஸ் டீமில் இருந்து ஒருவர் என விஜே விஷால் கூறுகிறார். ரவீந்தர் தான் போவார் என நினைக்கிறேன், 'அவர் கேமை ட்விஸ்ட் செய்வது போல எனக்கு தோன்றுகிறது' என்று தர்ஷா குப்தா தெரிவித்துள்ளார். இதையடுத்து தீபக், 'ஜாக்குலினை கூறியதோடு, ஒன் மேன் ஷோவாக அவர் இந்த ஷோவை மாற்ற முயற்சிக்கிறார்' என்று குற்றம் சாட்டியுள்ளார்.

சௌந்தர்யா போவார் என்றும், 'அவர் சத்தமே இல்லாமல் இருக்கிறார்' என்றும் கூறினார். 'சௌந்தர்யா போவார்' என்று சத்யா, அக்‌ஷிதா ஆகிய இருவரும் கூற, ரஞ்சித் போவார் என சுனிதா, தர்ஷா ஆகியோர் கூறுகின்றனர்.

மொத்தத்தில் இந்த வாரம் செல்வது ரவீந்தர், ரஞ்சித், மற்றும் சௌந்தர்யா மூவரில் ஒருவர் எலிமினேஷன் ஆவார்கள் என்பதே ஒட்டுமொத்த போட்டியாளர்களின் கணிப்பாக உள்ளது

More News

வேற லெவல் எண்டர்டெயின்மெண்ட்.. அஜித் படத்தின் ரிலீஸ் தேதியை மீண்டும் உறுதி செய்த சுரேஷ் சந்திரா..!

அஜித் நடித்து வரும் 'குட் பேட் அக்லி' என்ற படத்தின் அறிவிப்பு வெளியான நாளே அடுத்த ஆண்டு பொங்கல் தினத்தில் இந்த படம் ரிலீஸ் ஆகும் என்று கூறப்பட்டிருந்த நிலையில்

1000 ரூபாய் கேட்ட ரசிகருக்கு 1500 ரூபாய் அனுப்பிய ஜிவி பிரகாஷ்.. ரசிகரின் ரியாக்சன்..!

இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷிடம், ரசிகர் ஒருவர் சமூக வலைதளம் மூலம் அவசரமாக 1000 ரூபாய் கடன் கேட்ட நிலையில், ஜி.வி. பிரகாஷ் அந்த ரசிகருக்கு 1500 ரூபாய் அனுப்பி உள்ளதாக

10 ஆயிரம் கொடுத்தால் 50 ஆயிரம்.. ஐபோன் இலவசம்.. பாடகி சித்ரா அதிர்ச்சி..!

10 ஆயிரம் ரூபாய் முதலீடு செய்தால் 50 ஆயிரம் ரூபாய்  கிடைக்கும் என்றும் ஐபோன் இலவசம் என்றும் பாடகி சித்ரா பெயரில் மோசடியான விளம்பரம் வெளியானதை அடுத்து அவர்

பாடகி சின்மயி வீட்டிற்கு வந்த சமந்தா.. அடிப்பாவி என புலம்பிய கணவர்..!

பாடகி சின்மயி வீட்டிற்கு நடிகை சமந்தா வந்த நிலையில், அவrஐ பார்த்து  சின்மயி கணவர் அடிப்பாவி என்று கூறிய வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

எஸ்.வி.சேகர் வீட்டில் பிரமாண்ட கொலு! நூறு வருட பழமையான பொம்மைகளின் அழகு

நடிகர் எஸ்.வி.சேகர் அவர்களின் வீட்டில் அமைக்கப்பட்டிருக்கும் பிரமாண்ட கொலுவை ஆன்மீக கிளிட்ஸ் சேனலில் காணலாம்.