குறைவான வாக்கு பெற்ற இருவர்.. இவர்களில் ஒருவர் தான் இந்த வார எலிமினேஷனா?

  • IndiaGlitz, [Friday,October 18 2024]

பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை நாமினேஷன் படலம் நடைபெறும் என்பதும், நாமினேஷன் ஆனவர்கள் அந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை குறைந்த வாக்குகள் அடிப்படையில் வெளியேற்றப்படுவார் என்பதும் தெரிந்தது.

இந்த நிலையில், இந்த வார நாமினேஷனில் விஜே விஷால், தர்ஷா குப்தா, சௌந்தர்யா, ரஞ்சித், ஜெஃப்ரி, முத்துக்குமரன், தீபக், ஜாக்குலின், அர்னவ், சாச்சனா ஆகிய பத்து போட்டியாளர்கள் இருக்கும் நிலையில், இவர்களுக்கு கிடைத்த வாக்குகள் குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

முதல் கட்டமாக, விஜே விஷால் மற்றும் சௌந்தர்யா ஆகிய இருவருக்கும் அதிக வாக்குகள் கிடைத்துள்ளதாகவும், இதனை அடுத்து முத்துக்குமரன், ரஞ்சித், ஜெஃப்ரி, தீபக், ஜாக்லின், சாசன ஆகியோர்களுக்கும் வாக்குகள் அதிகமாக கிடைத்துள்ளதாகவும் தெரிகிறது.

மிகவும் குறைவான வாக்குகள் பெற்றவர்களாக அர்னவ் மற்றும் தர்ஷா குப்தா இருக்கும் நிலையில், இவர்களில் ஒருவர் தான் இந்த வாரம் எலிமினேஷன் ஆக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.