இந்த வாரம் வெளியேறுவது புல்லிங் குரூப்பில் உள்ள ஒருவரா? முதல் 2 இடத்தில் யார் யார்?
Send us your feedback to audioarticles@vaarta.com
பிக் பாஸ் நிகழ்ச்சி 50 நாட்களை தாண்டி விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் நிலையில் ஒவ்வொரு வாரமும் நாமினேசன் செய்யப்பட்ட போட்டியாளர்களில் ஒருவர் குறைந்த வாக்குகளின் அடிப்படையில் வெளியேற்றப்படுவார் என்பது தெரிந்ததே.
அந்த வகையில் இந்த வாரம் நேரடியாக நாமினேஷன் செய்யப்பட்ட மாயா மற்றும் அக்ஷயா அதன் பின்னர் சக போட்டியாளர்களால் நாமினேசன் செய்யப்பட்ட அர்ச்சனா, விசித்ரா, மணி, ரவீனா, பிராவோ மற்றும் பூர்ணிமா ஆகிய எட்டு பேர்கள் நாமினேஷனில் உள்ளனர்.
இதில் அர்ச்சனா மற்றும் விசித்ரா அதிக வாக்குகள் பெற்ற முதல் இரண்டு இடத்தை பிடித்துள்ளனர். இந்த நிலையில் கடைசி மூன்று இடத்தில் பிராவோ, அக்ஷயா மற்றும் பூர்ணிமா இருப்பதாகவும் இந்த மூவரில் பூர்ணிமா மிகவும் குறைவான வாக்குகள் பெற்று இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
இதே நிலை நீடித்தால் இந்த வாரம் புல்லிங் குரூப்பில் முக்கிய உறுப்பினராக இருக்கும் பூர்ணிமா வெளியேற அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. பூர்ணிமா வெளியேறினால் மாயாவின் விளையாட்டு எப்படி இருக்கும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com