இந்த வார எலிமினேஷன் இவரா? பணப்பெட்டியை எடுத்து கொண்டு முந்துவாரா? மாயாவுக்கு சிக்கல்?
Send us your feedback to audioarticles@vaarta.com
பிக் பாஸ் வீட்டில் இந்த வாரம் இறுதி போட்டிக்கு தகுதி பெற்ற விஷ்ணு தவிர அனைத்து போட்டியாளர்களும் நாமினேஷன் செய்யப்பட்டுள்ள நிலையில் குறைந்த வாக்குகள் பெற்ற ஒருவர் வரும் ஞாயிறு அன்று வெளியேற உள்ளார். இந்த நிலையில் அதிகாரப்பூர்வமற்ற வாக்குப்பதிவின் முடிவின்படி மிகவும் குறைவான வாக்குகளை பூர்ணிமா பெற்றிருப்பதாக தெரிவதால் அவர் இந்த வாரம் வெளியேற அதிக வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது.
ஏற்கனவே பூர்ணிமா பணப்பெட்டியை எடுத்துக்கொண்டு வெளியே செல்ல யோசித்துக் கொண்டிருப்பதால் எலிமினேசனுக்கு முன்பே அவர் பணப்பெட்டியை எடுத்துக்கொண்டு வெளியே சென்றால் மாயாவுக்கு தான் சிக்கல் என்று கூறப்படுகிறது.
ஏனெனில் பூர்ணிமாவை அடுத்து மாயா தான் மிகவும் குறைந்த வாக்குகளை பெற்றிருக்கிறார். பூர்ணிமா பணத்தை எடுக்காமல் இருந்தால் அவர் எலிமினேஷன் செய்யப்படுவார் என்றும் ஒருவேளை புத்திசாலித்தனமாக பணத்தை எடுத்து விட்டால் மாயா எலிமினேஷன் செய்ய செய்யப்படுவார் என்றும் தெரிகிறது.
ஒருவேளை இந்த வாரம் டபுள் எவிக்சனாக இருந்தால் மாயாவுக்கு அடுத்தபடியாக குறைந்த வாக்குகள் பெற்றுள்ள விஜய் வர்மாவும் எலிமினேட் செய்யப்படுவார். மொத்தத்தில் இந்த வாரம் எலிமினேஷன் பகுதி பரபரப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments