'சந்திரமுகி' கேரக்டரில் நடிப்பது இந்த நடிகையா? அப்ப கங்கனா ரனாவத் இல்லையா?

  • IndiaGlitz, [Sunday,March 12 2023]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் பி வாசு இயக்கத்தில் உருவான ’சந்திரமுகி’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் தற்போது ’சந்திரமுகி 2’ படத்தை பி வாசு இயக்கி வருகிறார். ராகவா லாரன்ஸ் முக்கிய வேடத்தில் நடித்து வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளது என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் இந்த படத்தில் சமீபத்தில் இணைந்தார் என்பதும் அவர்தான் சந்திரமுகி கேரக்டரில் நடித்து வருவதாகவும் கூறப்பட்டது. மேலும் அவரது நடன காட்சி மும்பையில் படமாக்கப்பட்டு வரும் நிலையில் சந்திரமுகி கேரக்டரில் அவர் நடித்து வருவது கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டதாகவே கருதப்பட்டது.

இந்த நிலையில் தற்போது வந்துள்ள தகவலின்படி கங்கனா ரனாவத் சந்திரமுகி கேரக்டரில் நடிக்கவில்லை என்று கூறப்படுகிறது. அப்படியென்றால் சந்திரமுகி கேரக்டரில் நடிப்பது யார் என்று பட குழுவினர்களிடம் விசாரித்த போது லட்சுமி மேனன் தான் சந்திரமுகி கேரக்டரில் நடிக்கிறார் என்று தெரிய வருகிறது.

லட்சுமி மேனன் இந்த படத்தில் மாற்றுத்திறனாளியாக நடிக்கிறார் என்றும் அவர்தான் சந்திரமுகி கேரக்டரில் நடிக்கிறார் என்றும் கூறப்படுகிறது. இந்த தகவல் ரசிகர்களுக்கு பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. மேலும் இந்த படம் ரஜினிகாந்த் நடித்த ’சந்திரமுகி’ படத்தின் தொடர்ச்சி அல்ல என்றும் இது பி வாசுவின் புதிய கதை என்றும் இந்த கதை ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஆச்சரியமான அனுபவத்தை கொடுக்கும் என்றும் கூறப்படுகிறது.

லைகா நிறுவனத்தின் பிரம்மாண்டமான தயாரிப்பில் உருவாகி வரும் இந்த படம் பிரபல தெலுங்கு இசையமைப்பாளர் மரகதமணி இசையில், ஆர்டி ராஜசேகர் ஒளிப்பதிவில் தோட்டா தரணி கலை இயக்கத்தில் உருவாக்கி வருகிறது. இந்த படம் இந்த ஆண்டு இறுதியில் வெளியாக வாய்ப்புள்ளத
 

More News

'நினைவிருக்கா? ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் மகன் அமீன்.. 'பத்து தல' சிங்கிள் அறிவிப்பு..!

 சிம்பு நடித்துள்ள 'பத்து தல' என்ற படத்திற்காக ஏஆர் ரகுமான் இசையில் அவருடைய மகன் அமீன் பாடிய சிங்கிள் பாடல் அறிவிப்பு சற்றுமுன் வெளியாகி இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

தங்கலான் படம்… ரொம்பவே விறுவிறுப்பான தகவலைப் பகிர்ந்த நடிகை பார்வதி!

இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கத்தில் சியான் விக்ரம் நடிப்பில் உருவாகிவரும் “தங்கலான்” திரைப்படத்தில் இணைந்து நடித்துவரும் நடிகை பார்வதி

ஆத்திரத்தில் தண்ணீர் பாட்டில்களை எட்டி உதைத்த ரொனால்டோ… வைரலாகும் காட்சிகள்!

நட்சத்திர கால்பந்து வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோ தனது அணி தோல்வியடைந்ததும் கோபத்தில் தண்ணீர் பாட்டில்களை எட்டி உதைத்த காட்சி தற்போது இணையத்தில் வைரலாகப் பகிரப்பட்டு வருகிறது.

இன்பநிதி சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த உதயநிதி.. பிரத்யேக பேட்டி..!

நடிகர் தயாரிப்பாளர் மற்றும் தமிழக விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நமக்கு அளித்த பிரத்யேக பேட்டியில் இன்ப நிதியின் புகைப்படம் வெளியாகி ஏற்படுத்திய சர்ச்சை குறித்து மனம் திறந்து பேசி

'காத்துவாக்குல ரெண்டு காதல்': 2 பெண்களுடன் ஒரே நாளில் திருமண செய்த இளைஞர்..!

 தெலுங்கானா மாநிலத்தில் 25 வயது இளைஞர் ஒருவர் ஒரே நாளில் இரண்டு பெண்களுக்கு தாலி கட்டி திருமணம் செய்து கொண்ட சம்பவம் காத்து வாக்குல ரெண்டு காதல் என நெட்டிசன்களை விமர்சனம் செய்ய வைத்துள்ளது.