close
Choose your channels

'டெடி' படத்தில் பொம்மையாக நடித்தது யார்? ரகசியத்தை போட்டுடைத்த இயக்குனர்!

Thursday, March 18, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ஆர்யா, சாயிஷா நடிப்பில் சக்தி சௌந்தர்ராஜன் இயக்கத்தில், டி இமான் இசையில் சமீபத்தில் ஓடிடியில் வெளியான திரைப்படம் ‘டெடி’. இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது என்பதும் குறிப்பாக டெடி பொம்மை வரும் காட்சிகள் அனைத்துமே குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ரசித்து பார்த்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் இந்த படத்தில் வரும் டெடி பொம்மை முழுக்க முழுக்க கிராபிக்ஸில் உருவாக்கப்பட்டதா? அல்லது உள்ளே ஒரு குழந்தையை வைத்து நடிக்க வைத்தார்களா? என்பது குறித்து ரசிகர்கள் விவாதம் செய்து வந்தனர்

இந்த நிலையில் இது குறித்த தகவலை இயக்குனர் சக்தி சௌந்தர்ராஜன் தனது டுவிட்டரில் போட்டு உடைத்துள்ளார். இந்த படத்தில் டெடி பொம்மையாக நடித்தவர் கோகுல் என்பவர் என்றும் இவர் முழுக்க முழுக்க அந்த டெடி பொம்மை உடையை அணிந்து கொண்டு நடித்தார் என்றும் அவருடைய தலை மட்டும் 3டி வடிவத்தில் டெக்னாலஜி மூலம் மாற்றப்பட்டது என்றும் அவர் தெரிவித்துள்ளார். இதனை இந்த தகவல் ரசிகர்களுக்கு பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment