யார் இந்த ஆரவ்? சில தெரியாத, புரியாத தகவல்கள்
Send us your feedback to audioarticles@vaarta.com
பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த சில வாரங்களாக கலகலப்பும் கைகலப்புமாக இருந்தது. குறிப்பாக ஓவியா-ஆரவ் ரொமான்ஸ் காட்சிகள் அனைவரையும் கவர்ந்தது. ஆனால் திடீரென ஆரவ் காதல் இல்லை, தான் கொடுத்த முத்தம் கூட மருத்துவ முத்தம் என்று கூறியது அனைவரையும் அதிர்ச்ச்குள்ளாக்கியது.
தற்போது ஓவியா இல்லாத பிக்பாஸ், 'அம்மா இல்லாத அதிமுக போன்றும், சிஎஸ்கே இல்லாதா ஐபிஎல் போன்றும் உள்ளது. ஓவியா வெளியேறிய பின்னர் நிச்சயம் ஆரவ் தனது மனசாட்சியை ஒருமுறை கேட்டுக்கொண்டால் எந்த பக்கம் நியாயம் உள்ளது என்பதை அவர் புரிந்து கொள்வார்.
இந்த நிலையில் ஆரவ் யார், ஒரு நட்சத்திர நாயகியை கவரும் வகையில் அவரிடம் என்ன இருந்தது என்பதை பார்ப்போம்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் பிறந்து வளர்ந்து திருச்சியில் பள்ளி, கல்லூரி படிப்பை முடித்தவர் ஆரவ். சிறு வயதில் இருந்தே நடனம், நாடகம் இவற்றில் ஆர்வம் அதிகமிருந்த ஆரவ்வுக்கு படிப்பு முடிந்ததும் சினிமாவில் சேர வேண்டும் என்பது ஆசை. ஆனால் வீட்டில் அதற்கு பயங்கர எதிர்ப்பு எனவே இன்ஜினீயரிங் முடித்தவுடன் படிப்புக்குத் தொடர்புடைய ஒரு கம்பெனியில் தலைமைப் பொறுப்பில் வேலைக்கு சேர்ந்தார். மாதம் ஒரு லட்சம் வரை சம்பளம் வாங்கியும் சினிமா ஆசை மனதை விட்டு நீங்கவில்லை. பின்னர் ஒருவழியாக வீட்டில் உள்ளவர்களிடம் தனது ஆசையை வெளிப்படுத்தினார். என்னுடைய ஆசை சினிமாவில் நடிக்க வேண்டும். அதனால் என்னை சினிமாவில் நடிக்க நீங்கள் சம்மதிக்க வேண்டும், சினிமாவில் நடித்தாலும் இப்போது இருப்பது போல் கண்ணியமாக இருப்பேன் என்று பெற்றோர் மற்றும் சகோதரருக்கு வாக்குக்கொடுத்தார்.
அவரது வாக்குறுதியை நம்பி ஆரவ் விருப்பதிற்கு சம்மதித்தனர். இதனால் வேலையை விட்ட ஆரவ் சினிமா வாய்ப்புகளை தேடினார். முதல்கட்டமாக மாடலிங் கலைஞராக மாறிய ஆரவ் 300க்கும் மேற்பட்ட விளம்பர படங்களில் நடித்தார். அதன்பின்னர் விஜய்ஆண்டனியின் சைத்தான் படத்தின் ஆடிசனில் கலந்து கொண்டு தேர்வாகி, அந்த படத்தில் ஒரு முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்தார். இந்த படத்தின் மூலம் தான் அவர் வெளியுலகிற்கு தெரியவந்து அது பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் அளவுக்கு இருந்தது.
பிக்பாஸ் வீட்டின் உள்ளே சென்றவுடன் ஓரிரு வாரங்கள் சாதாரணமாக இருந்த ஆரவ், பின்னர் ஓவியாவின் அழகு, உண்மை, வெகுளித்தனத்தை விரும்பினார். இருவருக்குமே காதல் மலர்ந்தது என்பது தான் உண்மை. ஓவியா விவகாரத்தில் முதலில் உண்மையாக நடந்து கொண்ட ஆரவ் போகப்போக சக்தி மற்றும் காயத்ரியுடன் நெருங்கி பழகியவுடன் அவரது நிலையில் மாற்றம் ஏற்பட்டது. ஓவியாவின் உண்மையான காதலை நடிப்பு என்று அவருக்கு ஊட்டப்பட்டது. அதை நம்பி அவர் ஒவியாவை தவிர்க்க நினைத்தார். இதனால் உண்மையாக காதலித்த ஓவியாவுக்கு மன உளைச்சல் ஏற்பட்டது. இப்போது ஆரவ் தன்னை ஒதுக்கினாலும் தன்னுடைய உண்மையான காதல் தோற்காது, நிச்சயம் ஆரவ் தன்னை புரிந்து கொண்டு ஒருநாள் வருவார் என்று வெளியில் காத்திருக்கின்றார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஆரவ் வெற்றி பெறுவாரா தோல்வி அடைவாரா என்பது தெரியாது. ஆனால் வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டும் என்றால் அவர் ஓவியா விஷயத்தில் ஒரு நல்ல முடிவை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் விருப்பமாக உள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Contact at support@indiaglitz.com
Comments