பிக்பாஸில் இந்த வாரம் கமல்ஹாசனா? ரம்யா கிருஷ்ணனா? சற்றுமுன் கிடைத்த தகவல்

பிக்பாஸ் தமிழ் சீசன் 5 நிகழ்ச்சியை உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய நிலையில் திடீரென அவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டதை அடுத்து தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அவருடைய உடல்நிலை படிப்படியாக தேறி வந்ததாகவும் அவர் கொரோனாவில் இருந்து குணமாகி விட்டதாகவும் சமீபத்தில் மருத்துவமனை அறிக்கை வெளியிட்டிருந்தது.

இருப்பினும் கமல்ஹாசன் டிசம்பர் 3ஆம் தேதி வரை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் டிசம்பர் 4ஆம் தேதி முதல் அவர் தனது வழக்கமான பணிகளை செய்யலாம் என்றும் மருத்துவமனை நிர்வாகம் அறிக்கையில் கூறியிருந்தது. இந்த நிலையில் இன்றுடன் கமல்ஹாசனின் தனிமைப்படுத்திக் கொள்ளும் காலம் முடிவடைந்ததை அடுத்து நாளை முதல் அவர் தனது வழக்கமான பணிகளை செய்ய உள்ளார்.

அந்த வகையில் நாளை நடைபெறும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கமல்ஹாசன் கலந்து கொள்ள இருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளது. கமல்ஹாசன் உடல்நலக்குறைவால் இருந்ததால் கடந்த வாரம் சனி ஞாயிறு மட்டும் நடிகை ரம்யாகிருஷ்ணன் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.