WHO: எப்படியும் இந்த ஆண்டு கிடைத்துவிடும்... நெஞ்சில் பாலை வார்க்கும் புதிய அறிவிப்பு!!!

  • IndiaGlitz, [Saturday,June 20 2020]

 

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த முடியாமல் உலகில் அனைத்து நாடுகளும் திண்டாடி வருகின்றன. இந்நிலையில் உலகில் உள்ள 750 கோடி மக்களின் ஒரே கனவாக இருப்பது கொரோனா தடுப்பூசி. அதுவும் எப்போ கிடைக்கும் எனத் தெரியாமல் மக்கள் நம்பிக்கை அற்று காணப்படும் இந்நேரத்தில் உலகச் சுகாதார நிறுவனத்தின் தலைமை மருத்துவர் டாக்டர் சௌமியா சுவாமிநாதன் நம்பிக்கை அளிக்கும் ஒரு புதிய அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறார்.

அவர் வெளியிட்டு உள்ள அறிக்கையில் உலகம் முழுவதும் 200க்கும் மேற்பட்ட குழுக்கள் கொரோனா தடுப்பூசி ஆய்வில் ஈடுபட்டு இருக்கின்றன. அதிலும் 10க்கு மேற்பட்ட ஆய்வுகள் தற்போது மனிதர்களின் மீது பரிசோதிக்கப் பட்டு வருகிறது. எனவே இந்த ஆண்டு இறுதிக்குள் நம்பிக்கை வாய்ந்த 1 அல்லது இரண்டு கொரோனா தடுப்பூசிகள் உறுதியாக கிடைத்து விடும். மருந்து கண்டுபிடிக்கப் பட்டவுடன் முதற்கட்டமாக 200 கோடி டோஸ்கள் தயாரிக்கப்படும். மேலும் கிடைக்கும் தடுப்பு மருந்து முதலில் 3 பிரிவினருக்கு கொடுக்க வேண்டியது மிகவும் அவசியம் எனவும் தெரிவித்து உள்ளார்.

சுவிட்சர்லாந்தின் ஜெனிவா நகரில் உள்ள உலகச் சுகாதார மையம் கொரோனா பெருந்தோற்று நேரத்தில் உலகின் அனைத்து நாடுகளுக்கும் ஒரு புரிந்துணர்வு பாலமாக செயல்பட்டு வருகிறது. மேலும் நோய்த் தாக்கம், பரவல், தடுப்பு நடவடிக்கை என அனைத்து வழிமுறைகளிலும் இதன் வழிகாட்டுதல் தற்போது உலகத்தில் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. அத்தனை முக்கியத்துவம் வாய்ந்த உலகச் சுகாதார மையத்தின் தலைமை மருத்துவர் இந்த ஆண்டின் இறுதிக்குள் கொரோனா தடுப்பு மருந்து கிடைத்துவிடும் எனத் தெரிவித்து உள்ளார். இந்த அறிவிப்பு மக்கள் மனதில் இருக்கும் பதற்றத்தைத் தவிர்க்க உதவும் எனவும் எதிர்ப்பார்க்கலாம்.

தடுப்பூசி கிடைத்த உடன் சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் காவல் துறையினருக்கு முதலில் பயன்படுத்த வேண்டும். அடுத்ததாக முதியவர்கள் மற்றும் சக்கரை நோயாளிகளுக்கு கொடுக்க வேண்டும். மேலும் நெரிசலான பகுதிகளில் வாழும் மக்களுக்கு கொரோனா தடுப்பூசி கிடைக்கும்படி செய்ய வேண்டும் எனவும் அவர் தெரிவித்து உள்ளார். கொரோனா மரபணு மற்றும் அதன் அறிகுறிகள் தொடர்ந்து மாறிக்கொண்டே இருப்பதைக் குறித்தும் அவர் கருத்துத் தெரிவித்து இருக்கிறார். கொரோனா வைரஸ் அடிக்கடி மாறும் தன்மையுடன் இருப்பது இயல்பானதுதான். இந்த மாற்றம் இன்ஃப்ளூயன்ஸாவை விட குறைவாக மாற்றத்திலே இருக்கிறது. நோய் எதிர்ப்பு மண்டலங்களை வலுப்படுத்தும் வகையில் இருந்து பெரிய அளவில் கொரோனா வைரஸ் மாறவில்லை எனவும் கூறியுள்ளார்.

மேலும் கொரோனா வைரஸ் தாக்கத்தை கட்டுப்படுத்த 1500 கோடி தடுப்பு மருந்துகள் தேவைப்படும் எனவும் கூறியிருக்கிறார். இது உலக மக்கள் தொகையில் இரண்டு மடங்கு என்பதும் குறிப்பிடத்தக்கது. இதற்கான முதலீடுகள் தற்போது தயாராக இருக்கின்றன. அதனால் இந்த ஆண்டு இறுதிக்குள் நல்ல முடிவினை எதிர்பார்க்கலாம் எனவும் நம்பிக்கை அளித்து உள்ளார். இந்நிலையில் உலகம் முழுவதும் நாளொன்றுக்கு பரவும் கொரோனா வைரஸின் எண்ணிக்கை 1 இல் இருந்து 2 லட்சமாக அதிகரித்து வருகிறது. இதுவரை 85 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் நோயால் பாதிக்கப் பட்டுள்ளனர். மேலும் 4.5 லட்சம் மக்கள் உயிரிழந்துள்ளனர். நிலைமை இப்படியே நீடித்தால் பெரும் அபாயத்தை இந்த உலகம் சந்திக்க வேண்டிவரும் எனவும் கூறப்படுகிறது.

More News

சென்னையில் முழு ஊரடங்கு மேலும் நீடிக்குமா? முதல்வர் பழனிசாமி பேட்டி

சென்னையில் கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் அதிகமாக பரவி வருவதை அடுத்து முழு ஊரடங்கு நேற்று முதல் பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் சற்று முன்னர் முதல்வர் பழனிசாமி

கொரோனாவுக்கு சென்னையில் 22 பேர் பலி: அதிர்ச்சி தகவல்

கடந்த சில நாட்களாக தமிழகத்தில் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வருகிறது என்பது தெரிந்ததே. குறிப்பாக தமிழகத்தில் கடந்த 3 நாட்களாக 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா

அடுத்த ரவுண்டுக்கு தயாராகிட்டாங்க போல...  கொரோனா ஹாட்ஸ்பாட்டாக மாறியிருக்கும் சீன மீன் மார்க்கெட்!!!

சீனாவின் தலைநகர் பெய்ஜிங்கில் புதிய வகை கொரோனா வைரஸ் நோய்த்தொற்று பரவி வருவதால் மீண்டும் பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டு இருக்கிறது

விஜய்யை நான் ஒரு பேரரசராக பார்த்தேன்: காமன்டிபி டிசைனர் பேட்டி

தளபதி விஜய்யை நான் ஒரு பேரரசனாக பார்த்தேன் என்று விஜய்யின் பிறந்தநாள் காமன்டிபியை டிசைன் செய்த டிசைனர் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது 

தொடர் தோல்வி எதிரொலி: மகிழ்ச்சியில் திரையரங்க உரிமையாளர்கள்

கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் கடந்த மூன்று மாதங்களாக தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் திரையரங்குகள் திறக்கப்படவில்லை.