ரூ.15 லட்சம் பணப்பெட்டியுடன் வெளியேறியது இந்த போட்டியாளரா?

பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி தற்போது இறுதி கட்டத்தை நெருங்கியுள்ள நிலையில் போட்டியில் இருந்து ஒருவர் வெளியேற பணப்பெட்டி டாஸ்க் கொடுக்கப்பட்டது. ரூபாய் 3 லட்சத்திலிருந்து ஆரம்பித்த இந்த பணப் பெட்டியின் மதிப்பு படிப்படியாக உயர்ந்து இறுதியில் 15 லட்ச ரூபாய்க்கு வந்தது

இதனையடுத்து பண பெட்டியை எடுக்க சுருதி மற்றும் ஜூலி ஆகிய இருவரும் விருப்பம் தெரிவித்ததை அடுத்து இருவருக்கும் ஒருசில டாஸ்குக்கள் வைக்கப்பட்டு அதில் வெற்றி பெறுபவர் பணப் பெட்டியை எடுத்துக் கொண்டு செல்லலாம் என பிக்பாஸ் அறிவித்திருந்தார்

இந்த நிலையில் பணப்பெட்டியை பெறுவதற்கான இறுதிக்கட்ட காயின் டாஸ்கில் தனது திறமையை முழுமையாக வெளிப்படுத்தி சுருதி வென்றார். இதனை அடுத்து அவருக்கு 15 லட்ச ரூபாய் பணப் பெட்டி கிடைத்தது. தோல்வி அடைந்த ஜூலி ஏமாற்றம் அடைந்தார்

இந்த நிலையில் ரூபாய் 15 லட்சம் பண பெட்டியுடன் சுருதி வெளியேறியதை அடுத்து ரசிகர்கள் அவரது முடிவை பாராட்டி வருகின்றனர். ஆனால் அதே நேரத்தில் பிக் பாஸ் அல்டிமேட் டைட்டில் வின்னருக்கு கொடுக்கப்படும் 50 லட்ச ரூபாயில் இந்த 15 லட்ச ரூபாய் கழிக்கப்படும் என்றும் கூறப்பட்டு வருகிறது