கமல்-ராகுல்காந்தி சந்திப்பு: அதிர்ச்சியில் தமிழக காங்கிரஸ்

  • IndiaGlitz, [Wednesday,June 20 2018]

நடிகர் கமல்ஹாசன் தேர்தல் கமிஷன் அலுவலகத்திற்கு செல்வதற்காக இன்று டெல்லி சென்றிருந்தார் என்பது தெரிந்ததே. அவருடைய பயண திட்டத்தில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அவர்களை மரியாதை நிமித்தமாக சந்திப்பது மட்டுமே இருந்ததாக செய்திகள் வெளிவந்தது.

ஆனால் சற்றுமுன் கமல்ஹாசன் திடீரென காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியை சந்தித்து பேசியுள்ளார். இந்த சந்திப்பு ரகசியமாக வைக்கப்பட்டிருந்ததாகவும், இந்த சந்திப்பு குறித்து தமிழக காங்கிரஸ்காரர்களுக்கே தெரியாது என்றும் கூறப்படுகிறது.

பொதுவாக ராகுல்காந்தியை தமிழகத்தில் உள்ளவர்கள் சந்திக்க வேண்டுமென்றால் தமிழக காங்கிரஸ் தலைவர் தான் அப்பாயின்மெண்ட் வாங்கி தருவது வழக்கம். ஆனால் கமலுக்கு அப்பாயின்மெண்ட் வாங்கி தந்தது யார்? என்பது தற்போது தமிழக காங்கிரஸ் தலைவர்களுகே தெரியவில்லை.

இந்த நிலையில் இதுகுறித்து கமல் வட்டாரங்களில் விசாரித்தபோது கமலுக்கு நெருக்கமான திரையுலக பிரமுகர் ஒருவர் ராகுல்காந்தியை சந்திக்க அப்பாயிமெண்ட் வாங்கி தந்ததாக கூறப்படுகிறது. அந்த திரையுலக பிரமுகர் யாராக இருக்கும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர்கள் குழப்பத்தில் உள்ளனர்,.

More News

சின்னத்திரை நடிகை நிலானி திடீர் கைது! 

ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என்று தூத்துகுடி மக்கள் பல நாட்களாக போராடி வந்தனர். இந்த போராட்டத்தின் 100வது நாளில் திடீரென வன்முறை வெடித்ததால் துப்பாக்கி சூடு

அஞ்சலி பிறந்த நாளை மறந்த ஜெய்! என்ன ஆச்சு பலவருட காதல்?

'எங்கேயும் எப்போதும்' படத்தில் நடித்தபோது ஜெய் மீது அஞ்சலிக்கு காதல் ஏற்பட்டதாகவும், அதன் பின்னர் இருவரும் காதல் பறவைகளாக சுற்றி வந்ததும் அறிந்ததே

ராகுல்காந்தியை சந்திக்கின்றார் கமல்! புதிய கூட்டணியா?

நடிகர் கமல்ஹாசன் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அரசியல் கட்சி ஆரம்பித்து பிசியாக உள்ளார். 'விஸ்வரூபம் 2' ரிலீஸ், 'பிக்பாஸ்  2' ஆகிய பணிகளுக்கு இடையே அவர் அரசியல் பணிகளிலும் ஈடுபட்டு வருகிறார்.

அருண்விஜய்க்கு கால்ஷீட் தர மறுத்த விஜய்! ஏன் தெரியுமா?

விஜய் நடிக்கும் படம் ஒன்றை தான் தயாரிக்க விரும்பி, அவரை கடந்த சில வருடங்களுக்கு முன் சந்தித்ததாகவும், ஆனால் தனக்கு அவர் கால்ஷீட் தராமல் அவர் கொடுத்த அறிவுரை

முன்ஜாமீன் கிடைக்காத எஸ்.வி.சேகருக்கு கிடைத்த ஜாமீன்

நகைச்சுவை நடிகரும், பாஜக பிரமுகருமான எஸ்.வி.சேகர் கடந்த சில நாட்களுக்கு முன்னர் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பெண் பத்திரிகையாளர் குறித்த சர்ச்சைக்குரிய கருத்து ஒன்றை பதிவு செய்தார்.