கமல்-ராகுல்காந்தி சந்திப்பு: அதிர்ச்சியில் தமிழக காங்கிரஸ்

  • IndiaGlitz, [Wednesday,June 20 2018]

நடிகர் கமல்ஹாசன் தேர்தல் கமிஷன் அலுவலகத்திற்கு செல்வதற்காக இன்று டெல்லி சென்றிருந்தார் என்பது தெரிந்ததே. அவருடைய பயண திட்டத்தில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அவர்களை மரியாதை நிமித்தமாக சந்திப்பது மட்டுமே இருந்ததாக செய்திகள் வெளிவந்தது.

ஆனால் சற்றுமுன் கமல்ஹாசன் திடீரென காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியை சந்தித்து பேசியுள்ளார். இந்த சந்திப்பு ரகசியமாக வைக்கப்பட்டிருந்ததாகவும், இந்த சந்திப்பு குறித்து தமிழக காங்கிரஸ்காரர்களுக்கே தெரியாது என்றும் கூறப்படுகிறது.

பொதுவாக ராகுல்காந்தியை தமிழகத்தில் உள்ளவர்கள் சந்திக்க வேண்டுமென்றால் தமிழக காங்கிரஸ் தலைவர் தான் அப்பாயின்மெண்ட் வாங்கி தருவது வழக்கம். ஆனால் கமலுக்கு அப்பாயின்மெண்ட் வாங்கி தந்தது யார்? என்பது தற்போது தமிழக காங்கிரஸ் தலைவர்களுகே தெரியவில்லை.

இந்த நிலையில் இதுகுறித்து கமல் வட்டாரங்களில் விசாரித்தபோது கமலுக்கு நெருக்கமான திரையுலக பிரமுகர் ஒருவர் ராகுல்காந்தியை சந்திக்க அப்பாயிமெண்ட் வாங்கி தந்ததாக கூறப்படுகிறது. அந்த திரையுலக பிரமுகர் யாராக இருக்கும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர்கள் குழப்பத்தில் உள்ளனர்,.