அதிகளவில் சம்பளம் பெறும், டாப் 5 தமிழ் நடிகர்கள் யார்....? தலைவரை பின்னுக்கு தள்ளிய தளபதி....!
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழ் திரையுலகில் நடிகர், நடிகைகளின் சம்பளம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது, மலையாள சினிமாவில் 1 கோடி சம்பளம் வாங்கவே நடிகர்கள் போராடிக்கொண்டிருக்கும் சூழலில், தமிழ் சினிமாவில் நடிகர்களின் சம்பளம் 100 கோடியை தாண்டி வருகிறது. ஒவ்வொரு படமும் கமர்ஷியல் ரீதியாக வெற்றியடையும் போது, நடிகர்களின் சம்பளம் அதிகரிக்கின்றது. அந்த வகையில் கோடிகளில் சம்பளம் வாங்கும் டாப் 5 நடிகர்களின் பட்டியலை இதில் பார்க்கலாம்.
நடிகர் தனுஷ்....!
**தமிழ், தெலுங்கு, பாலிவுட், ஹாலிவுட் என சர்வதேச அளவில் பல மொழிகளில், பல படங்களில் நடித்து வருகிறார் நடிகர் தனுஷ். வளர்ந்து வரும் நடிகரான இவர் தற்போதைய அளவில் 5-ஆவது இடத்தை பிடித்துள்ளார்.
**இதுவரை தனுஷ் 15 கோடி வரை சம்பளமாக பெற்று வந்தார். தெலுங்கு படத்தில் நடிக்கவிருப்பதன் மூலம் 50 கோடி வரை சம்பளம் பேசப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
**இத்திரைப்படம் பல மொழிகளில் திரையிடப்பட உள்ளதால், நல்ல லாபம் கிடைக்கும் என்பதன் அடிப்படையில் தயாரிப்பு நிறுவனம் தனுஷிற்கு இந்த சம்பளம் கொடுக்க முன்வந்துள்ளது.
உலகநாயகன் கமல்ஹாசன்....!
***உலகநாயகன் கமல்ஹாசன், உலகளவில் பாராட்டப்பட்ட நடிகராக இருந்தாலும், பல போராட்டங்களுக்குப்பிறகு தான், இவருக்கு இந்த சம்பளம் உயர்ந்துள்ளது.
***கிட்டத்தட்ட 62 வருடங்கள் தமிழ் சினிமாவில் நடித்து, தலைசிறந்த நாயகனாக வலம் வருகிறார் கமல். கமர்ஷியல் படங்களை காட்டிலும், கதைக்களத்திற்கும், நடிப்பிற்கும் முக்கியத்துவம் தரும் படங்களில் நடிக்கும் கமலுக்கு, கடந்த சில வருடங்களாகவே வர்த்தக எல்லை சுருங்கியுள்ளது.
***ஏகப்பட்ட விமர்சனங்களுக்கு அப்பால் தயாரிப்பாளர், இயக்குனர், பாடகர் என தன்னுடைய, அசாத்திய திறமை மூலம், இன்றைய இளைஞர்களுடன் போட்டிபோடும் அளவிற்கு பல்வேறு கலை அவதாரங்களை செய்து வருகிறார்.
***சம்பள பட்டியலில் 4-ஆவது இடத்தை பிடித்த கமலுக்கு, இதுவரை 55 கோடி வரை சம்பளம் தந்ததாக கூறப்படுகிறது.
தல அஜித்......!
*** சமூகவலைத்தளங்களில் இல்லாமலும், எந்தவொரு பொதுநிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்ளாமலும், லட்சக்கணக்கான ரசிகர்கள் கூட்டத்தை வைத்திருப்பவர் நடிகர் தல அஜித்.
*** வலிமை திரைப்படம் மூலம் தயாரிப்பாளர் போனி கபூர் அஜித்திற்கு, 55 கோடி வரை சம்பளம் வரை கொடுத்ததாக கூறப்படுகிறது. இப்படத்திற்கு பிறகு அஜித்திற்கு ஊதியம் உயரும் என சினிமா வட்டாரங்களில் கூறப்படுகின்றது.
தலைவர் ரஜினிகாந்த்....!
*** தமிழ் சினிமாவில் கடந்த மூன்று தலைமுறைகளாகவே, கதாநாயகனாக மட்டுமே நடித்து வரும் நடிகர் தலைவர் தான். இதுவரை உச்சபட்ச நட்சத்திரமாக விளங்கி வந்த ரஜினிகாந்த், தர்பார் படத்திற்காக 100 கோடி வரை சம்பளம் பெற்றுள்ளார்.
*** தற்போது சிவா இயக்கத்தில், சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில், வெளியாகக்கூடிய "அண்ணாத்த" படத்திற்கும், 100 கோடி ரூபாய் சம்பளம் தரப்பட்டுள்ளது. இம்முறை பட்டியலில் இருந்து சற்று சறுக்கியுள்ளார் தலைவர், அதாவது 1 முதல் இடத்திலிருந்து, 2-ஆவது இடத்திற்கு நகர்ந்துள்ளார்.
தளபதி விஜய்....!
*** இந்த பட்டியலில் முதல் இடத்தை பிடித்துள்ளார் நடிகர் தளபதி விஜய். இதுவரை சம்பளமாக 80 கோடி வரை பெற்று வந்தார் விஜய்.
*** தற்போது இவர் நடித்து வரும் "பீஸ்ட்" திரைப்படத்திற்காக, இவருக்கு 85 கோடி ரூபாய் வரை சம்பளம் பேசப்பட்டுள்ளது.
***இதையடுத்து தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில், உருவாகி வரும் விஜயின் அடுத்த படத்திற்கு 120 கோடி ரூபாய் சம்பளம் தருவதாக கூறப்பட்டுள்ளது. இருமொழி படம் என்பதால், இந்த அளவிற்கு சம்பளம் உயர்த்தப்பட்டுள்ளது. முதன் முறையாக ரஜினிகாந்த அவர்களை பின்னுக்கு தள்ளி, சம்பள பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளார் நடிகர் விஜய்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
DhanaLakshmi
Contact at support@indiaglitz.com
Comments