நிஜமான ஹீரோக்கள் யார் - சேரன்
Send us your feedback to audioarticles@vaarta.com
கடந்த இரண்டு நாட்களாக ஒரு வீடியோ இணையதளத்தில் பயங்கர வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் ஒரு மலைப்பாம்பு ஒரு நாயை சுற்றிக் கொண்டுள்ளது. உயிரை இழக்கும் பரிதாபத்தில் அந்த நாய் செய்வதறியாது தவித்துக் கொண்டிருக்க, அப்போது அங்கு வந்த மூன்று சிறுவர்கள் தங்கள் உயிரையும் பொருட்படுத்தாமல் அந்த பாம்பிடமிருந்து நாயை காப்பாற்றுகின்றனர்
வீரமான சிறுவர்களின் இந்த செயல் போற்றப்படும் பாராட்டப்பட்டும் வருகிறது. யாரென்றே தெரியாத இந்த சிறுவர்களுக்கு சமூக வலைத்தள பயனாளிகள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் இது குறித்து கருத்து தெரிவித்த பிக்பாஸ் புகழ் சேரன் ’நிஜமான ஹீரோக்கள் இவர்கள் தான் என்று தெரிவித்துள்ளார். மேலும் நிஜமா இந்த சமூகத்தில் அடுத்த உயிரை பற்றி கவலைப்படுபவர்கள், அதை காப்பாற்ற முனைபவர்கள், தங்களின் வலிமை தெரிந்தவர்கள் இதுபோன்ற இளைஞர்களே. அவர்களைப்பற்றி பேசுங்கள் இவர்களைப் போன்றோரை இவ்வுலகில் முன்னிறுத்த முயலுங்கள். வாழ்க்கை ஒரு போர்க்களம் வாழ்ந்துதான் பார்க்கனும்’ என்று சேரன் கூறியுள்ளார். சேரனின் இந்த டுவீட் தற்போது வைரலாகி வருகிறது.
நிஜமான ஹீரோக்கள், நிஜமா இந்த சமூகத்தில் அடுத்த உயிரை பற்றி கவலைப்படுபவர்கள் அதை காப்பாற்ற முனைபவர்கள், தங்களின் வலிமை தெரிந்தவர்கள் இதுபோன்ற இளைஞர்களே.
— Cheran (@directorcheran) September 27, 2019
அவர்களைப்பற்றி பேசுங்கள் இவர்களைப்போன்றோரை இவ்வுலகில் முன்னிறுத்த முயலுங்கள். வாழ்க்கை ஒரு போர்க்களம் வாழ்ந்துதான் பார்க்கனும். https://t.co/xZX2XVLx4o
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments