நிஜமான ஹீரோக்கள் யார் - சேரன்

கடந்த இரண்டு நாட்களாக ஒரு வீடியோ இணையதளத்தில் பயங்கர வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் ஒரு மலைப்பாம்பு ஒரு நாயை சுற்றிக் கொண்டுள்ளது. உயிரை இழக்கும் பரிதாபத்தில் அந்த நாய் செய்வதறியாது தவித்துக் கொண்டிருக்க, அப்போது அங்கு வந்த மூன்று சிறுவர்கள் தங்கள் உயிரையும் பொருட்படுத்தாமல் அந்த பாம்பிடமிருந்து நாயை காப்பாற்றுகின்றனர்

வீரமான சிறுவர்களின் இந்த செயல் போற்றப்படும் பாராட்டப்பட்டும் வருகிறது. யாரென்றே தெரியாத இந்த சிறுவர்களுக்கு சமூக வலைத்தள பயனாளிகள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் இது குறித்து கருத்து தெரிவித்த பிக்பாஸ் புகழ் சேரன் ’நிஜமான ஹீரோக்கள் இவர்கள் தான் என்று தெரிவித்துள்ளார். மேலும் நிஜமா இந்த சமூகத்தில் அடுத்த உயிரை பற்றி கவலைப்படுபவர்கள், அதை காப்பாற்ற முனைபவர்கள், தங்களின் வலிமை தெரிந்தவர்கள் இதுபோன்ற இளைஞர்களே. அவர்களைப்பற்றி பேசுங்கள் இவர்களைப் போன்றோரை இவ்வுலகில் முன்னிறுத்த முயலுங்கள். வாழ்க்கை ஒரு போர்க்களம் வாழ்ந்துதான் பார்க்கனும்’ என்று சேரன் கூறியுள்ளார். சேரனின் இந்த டுவீட் தற்போது வைரலாகி வருகிறது.
 

More News

வெளியே வந்த கவின் தாயாருக்காக செய்த முதல் வேலை!

கடந்த சில வாரங்களுக்கு முன் சிட்பண்ட் மோசடி ஒன்றில் சிக்கிய பிக்பாஸ் கவின் தாயார் ராஜலட்சுமி மற்றும் பாட்டி தமயந்தி நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்

'கேங் லீடர்' நாயகியை இயக்குனரிடம் பரிந்துரை செய்த சிவகார்த்திகேயன்!

சிவகார்த்திகேயன் நடித்த 'நம்ம வீட்டு பிள்ளை' திரைப்படம் இன்று வெளியாகி பெரும்பாலான பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்று வருகிறது. எனவே இந்த படம் நிச்சயம் சூப்பர் ஹிட்டாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது 

விஜய்க்கு வில்லனாக நடிக்கும் விஜய்சேதுபதிக்கு எவ்வளவு சம்பளம்?

தளபதி விஜய் நடித்து முடித்துள்ள 'பிகில் திரைப்படம் வரும் தீபாவளி அன்று திரையில் வெளியாக உள்ள நிலையில், அவரது அடுத்த படமான 'தளபதி 64' படத்தின் படப்பிடிப்பு வரும் அக்டோபர் 3ம் தேதி தொடங்கும்

பார்த்திபனின் அடுத்த படத்தில் சதீஷ் நாயகியா?

இயக்குனர் மற்றும் நடிகர் பார்த்திபன் அடுத்த படத்திற்கு தயாராகிவிட்டதாக தெரிகிறது. பார்த்திபனின் அடுத்த படம் ரொமான்ஸ் படமாக இருக்கும்

பிரபல எழுத்தாளர் மகரிஷி காலமானார்: ரஜினி படமாக மாறிய இவரது நாவல்

பிரபல தமிழ் எழுத்தாளர் மகரிஷி சேலத்தில் உடல்நலக்குறைவால் காலமானர். அவருக்கு வயது 87