'பிக்பாஸ் 2' ஃபைனலை நெருங்குவது யார் யார்?
- IndiaGlitz, [Saturday,September 08 2018]
கடந்த சில நாட்களாக விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. இந்த வாரம் செண்ட்ராயன், ஜனனி, மும்தாஜ், ஐஸ்வர்யா மற்றும் விஜயலட்சுமி ஆகியோர் எவிக்சன் பட்டியலில் உள்ள நிலையில் நியாயமான வாக்குகளின் அடிப்படையில் பார்த்தால் ஐஸ்வர்யா வெளியேற வாய்ப்பு அதிகம். அவருக்கு குறைந்தபட்சமாக 15% வாக்குகள் மட்டுமே பதிவாகியுள்ளதாகவும், அதிகபட்சமாக செண்ட்ராய்னுக்கு 22% வாக்குகள் பதிவாகியுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்த வாரம் ஐஸ்வர்யா வெளியேறிவிட்டால் அடுத்த வாரம் மும்தாஜ் vs ரித்விகா செமி பைனலுக்கு அதிக வாய்ப்பு உள்ளது. இப்படி ஒரு செமி பைனல் வந்தால் பிக்பாஸ் வீட்டில் நன்றாக சாப்பிட்டு, தூங்கி, இலவச அட்வைஸ் கொடுத்து, போலி அன்பு செலுத்தி வரும் மும்தாஜ் வெளியேறுவது உறுதி. அதன்பின்னர்தான் கடும் போட்டி காத்திருக்கின்றது.
செண்ட்ராயன் சில நேரங்களில் கோமாளித்தனம் செய்தாலும் இன்னும் மக்கள் ஆதரவு அவருக்கு இருப்பதால் அவர் ஃபைனலுக்கு செல்வது உறுதி. அதேபோல் ரித்விகா, விஜயலட்சுமி மற்றும் ஜனனிக்கும் ஃபைனல் வாய்ப்பு அதிகம் என்றே கருதப்படுகிறது.
எனவே அடுத்த இரண்டு வாரங்களில் யாஷிகாவும் பாலாஜியும் வெளியேற வாய்ப்பு உள்ளது. அல்லது இந்த இருவரில் ஒருவர் தப்பித்தால் விஜயலட்சுமி வெளியேற வேண்டிய நிலை வரும். மொத்தத்தில் பிக்பாஸ் டைட்டில் செண்ட்ராயன் அல்லது ரித்விகாவுக்கு செல்லும் என்பதே பலரது கணிப்பாக உள்ளது.