மிஸ்டர் மனைவி சீரியல்.. ஷபானாவுக்கு பதில் இந்த நடிகையா?
Send us your feedback to audioarticles@vaarta.com
பிரபல தொலைக்காட்சி சீரியல் நடிகை ஷபானா சன் டிவியில் ஒளிபரப்பான ’மிஸ்டர் மனைவி’ என்ற சீரியலில் அஞ்சலி என்ற கேரக்டரில் நடித்துக் கொண்டிருந்த நிலையில் திடீரென தனிப்பட்ட காரணங்களுக்காக அந்த சீரியலில் இருந்து விலகுவதாகவும் அஞ்சலி கேரக்டரை தான் மிகவும் மிஸ் செய்வதாகவும் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் ஷபானா கர்ப்பமாக இருப்பதால் சீரியலில் இருந்து விலகுவதாக கூறப்பட்ட நிலையில் அதை ஷபானா மறுத்திருந்தார் என்பதும், தான் கர்ப்பம் இல்லை என்று விளக்கம் அளித்தார் என்பதையும் பார்த்தோம். மேலும் அஞ்சலி கேரக்டரில் நடிக்க இருக்கும் நடிகைக்கு எனது வாழ்த்துக்கள் என்றும் அவர் கூறியிருந்தார்.
இதனை அடுத்து ’மிஸ்டர் மனைவி’ சீரியலில் அஞ்சலி கேரக்டரில் நடிப்பது யாராக இருக்கும் என்ற கேள்வி ரசிகர்கள் மனதில் எழுந்திருந்த நிலையில் தற்போது ஷபானாவுக்கு பதிலாக அஞ்சலி கேரக்டரில் நடிப்பவர் தேப்ஜானி மோடக் என்பது தெரிய வந்துள்ளது.
‘மிஸ்டர் மனைவி’ சீரியல் தேப்ஜானி மோடக் நடித்த காட்சிகளின் படப்பிடிப்பு விரைவில் நடைபெற இருப்பதாகவும் விரைவில் இந்த சீரியலில் அவர் என்ட்ரி கொடுக்கும் காட்சி வரும் என்று கூறப்படுகிறது. ஏற்கனவே தேப்ஜானி மோடக், சன் டிவியில் ஒளிபரப்பான ‘ராசாத்தி’ என்ற சீரியலில் பாவனிரெட்டி க்கு பதிலாக நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com