கருப்பு பூஞ்சையை காட்டிலும் கடுமையாக தாக்கும் வெள்ளை பூஞ்சை தொற்று...! பீகாரில் பரவல்....!

கொரோனா உலகையே உலுக்கி வரும் நிலையில், தற்போது வெள்ளை பூஞ்சை தொற்று என்ற நோய் புதிதாக பரவி வருவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்தியா முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை, நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சூழலில், தற்போது கருப்பு பூஞ்சை தொற்று என்ற கோவிட் நோயாளிகளை தாக்கி வருகிறது. வடமாநிலங்களில் பலரும் தமிழகம் மற்றும் கேரளாவில் ஒரு சிலர் இந்த கருப்பு பூஞ்சை தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த தொற்றால் ஒருசிலர் இறந்துள்ளதாகவும் செய்திகள் வந்த வண்ணம் உள்ளது. தமிழ்நாடு, தெலுங்கானா மற்றும் ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் அரசு இதை பெரும் தொற்றாக அறிவித்துள்ளது.

கருப்பு பூஞ்சை தொற்றை விட, கடும் பாதிப்பை விளைவிக்கக் கூடிய வெள்ளை பூஞ்சை தொற்று, என்ற நோய் பரவி வருவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். பீகார் மாநிலத்தின் தலைநகரான பாட்னா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 4 நபர்களுக்கு, இந்த புதிய வெள்ளை பூஞ்சை தொற்று ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். இந்த தொற்று பாதிக்கப்பட்ட நபர்கள் நால்வரில், ஒருவர் பாட்னாவில் பிரபல சிகிச்சை நிபுணராக இருந்து வருகிறார்.

வெள்ளை பூஞ்சை தொற்று நுரையீரல், தோல், நகங்கள், வாய் , வயிறு, குடல், இனப்பெருக்க உறுப்புகள் மற்றும் மூளை உள்ளிட்ட உறுப்புகளை பெருமளவில் பாதிக்கக்கூடியது. இந்த நோயானது கருப்பு பூஞ்சை தொற்றை காட்டிலும் மிக ஆபத்தானது என, மூத்த ஆலோசகர் மற்றும் சுவாச மருத்துவம், நுரையீரல் மருத்துவ தலைமை மருத்துவரான அருனேஷ் குமார் கூறியுள்ளார்.

நோய் எதிர்ப்பு சக்தி இல்லாதது, சுத்தமில்லாத தண்ணீர் பயன்படுத்துவது மற்றும் சுகாதாரமற்ற முறைகளால், வெள்ளை பூஞ்சை தொற்று பாதிப்பு ஏற்படும் என மருத்துவ நிபுணர்கள் கூறுகிறார்கள்.

நோயின் அறிகுறிகள்:

1.கொரோனா தொற்றில் ஏற்பட்ட பாதிப்புகள் போலவே, வெள்ளை பூஞ்சை தொற்றின் அறிகுறிகள் இருக்கும்

2.ஆர்டிபிசிஆர் சோதனை செய்து பார்த்தல் நெகட்டிவ் என வரும். ஆனால் மக்கள் சி.டி-ஸ்கேன் அல்லது எக்ஸ்ரே

எடுத்து பார்த்துதான் பாதிப்பை அறிந்து கொள்ள முடியும். அதன் பின் சிகிச்சை எடுத்துக் கொள்வது அவசியமானது.

3.கோவிட் நோயாளிகள், நீரிழிவு நோய் உள்ளவர்கள், புற்றுநோய் நோயாளிகள் மற்றும் நீண்ட காலத்திற்கு ஸ்டெராய்டுகளை உட்கொள்பவர்கள் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பவர்களுக்கு, வெள்ளை பூஞ்சை தொற்று பாதிப்பு எளிதாக ஏற்படுகிறது.

4.ஆக்சிஜன் சிலிண்டர்கள் மாற்றும் போது தொற்று பரவலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இதனால் மக்கள் மெத்தனம் காட்டாமல் ஆரம்ப காலத்திலே கண்டறிந்து, சிகிச்சை பெற வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

More News

சமந்தா படக்குழுவினர்களை எச்சரித்த 'நாம் தமிழர் கட்சி' சீமான்!

சமந்தா நடித்த 'தி ஃபேமிலிமேன் 2' என்ற வெப்தொடர் வரும் ஜூன் 4ஆம் தேதி அமேசான் பிரைமில் வெளியாகவிருக்கும் நிலையில் அந்த தொடரை நிறுத்தாவிட்டால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்

ஒரிஜினல் கேங்ஸ்டர்ஸ்: வைரலாகும் ரஜினி-மோகன்பாபு புகைப்படங்கள்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் தெலுங்கு சூப்பர் ஸ்டார் மோகன்பாபு ஆகிய இருவரும் நெருங்கிய நண்பர்கள் என்பதும் குடும்ப அளவில் இரு குடும்பத்தினர் மிகவும் நெருக்கமானவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது

ஜெயம் ரவி பட நாயகிக்கு கொரோனா: வீட்டில் தனிமைப்படுத்தி கொண்டதாக தகவல்!

ஜெயம் ரவி நடித்த படத்தின் நாயகிக்கு கொரனோ வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதை அடுத்து அவர் வீட்டில் தன்னைத்தானே தனிமைப் படுத்திக் கொண்டு சிகிச்சை பெற்று வருகிறார்

'தளபதி 65' ரிலீஸ் தேதி தள்ளிப்போகிறதா?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் 'அண்ணாத்த' மற்றும் தளபதி விஜய் நடித்து வரும் 'தளபதி 65' ஆகிய இரண்டு திரைப்படங்களையும் தயாரித்து வரும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் 'அண்ணாத்த' படத்தை தீபாவளி

நடிப்பு நாயகன் மோகன்லாலுக்கு பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்!

மலையாள சூப்பர் ஸ்டார் மற்றும் நடிப்பு நாயகன் மோகன்லால் இன்று தனது 61வது பிறந்த நாளை கொண்டாடி வரும் நிலையில் அவருக்கு ஒட்டுமொத்த இந்திய திரையுலகினர் பிறந்தநாள் நல்வாழ்த்துக்களை