கர்ப்பம் தரிக்க எந்த பொசிஷன் சரியானது.....? தம்பதிகள் எத்தனை முறை உடலுறவு வைத்துக்கொள்ளலாம்....!
Send us your feedback to audioarticles@vaarta.com
சில தம்பதிகளுக்கு ஒருமுறை உடலுறவு வைத்துக்கொண்டாலே கருத்தரிக்கும் வாய்ப்புள்ளது. ஆனால் பலருக்கும் மாதங்கள், வருடங்கள் என நீண்டு போகின்றது. இதனால் மனதளவிலும், உடலளவிலும் பாதிப்படைந்த தம்பதிகள் மருத்துவரை நாடி ஏராளமான பணத்தை செலவிடுகிறார்கள். ஆனால் கர்ப்பம் தரிப்பதில் சில அறிவியல் ரீதியான காரணங்களும், ஆய்வுகளும் உள்ளது. அதுவும் தம்பதிகள் எத்தனை முறை உடலுறவு வைத்துக்கொள்ள வேண்டும்....? எந்த பொஷிஷனில் செய்தால் கருத்தரிக்க இயலும் என்ற காரணங்களும் உள்ளது. இதை பின்பற்றினால் கர்ப்பம் தரிக்க வாய்ப்புள்ளது.
இயல்பாகவே உடலுறவை முயற்சி செய்யத் துவங்கிய நாளிலிருந்து, பாசிட்டிவ் வரும் வரை தம்பதிகள் சுமார் 78 முறை செக்ஸ் வைத்துக் கொள்கிறார்களாம். இது 158 நாட்களாகவும், 6 மாதங்களாகவும் நீடித்து செல்கின்றது.
1,194 தம்பதிகளை வைத்து ஆய்வு செய்தது பார்த்ததில், ஒரு மாதத்திற்கு அவர்கள் 13 முறை உடலுறவு வைத்துக்கொண்டதாக கூறப்படுகிறது. இந்த தகவல் வேடிக்கையான இருப்பினும், பாசிட்டிவ் ரிசல்ட்டை பெறுவதற்காகவும், கவலையுடனும், மன அழுத்தத்துடனும் தம்பதிகள் இதை பின்தொடர்வதாகவும் கூறப்படுகின்றது. இந்த முறையானது இயல்பாக நடக்காமல், ஒரு வேலைபோல் நடப்பதாகவும் அவர்கள் கூறியுள்ளனர். இதில் 43% மக்கள் கருத்தரிக்க இயலவில்லை என்று வருத்தத்தில் மன அழுத்தம் அடைகின்றனர். ஒரு கட்டத்திற்கு மேல் கருத்தரிப்பது கடின உழைப்பாக மாறிவிட்டதாகவும் கூறியுள்ளனர்.
கருத்தரிக்க உதவும் உடலுறவு பொசிஷன்....!
கரு உண்டாவதற்கு முக்கிய காரணமாக இருப்பதில் சில செக்ஸ் பொசிஷன்களும் அடங்கும். அதில் 3 முக்கிய பொசிஷன்களை தம்பதிகள் முயற்சி செய்கிறார்கள்.
டாகி ஸ்டைல் (doggy style ):
இந்த ஸ்டைலில் முயற்சித்தால், கருத்தரிக்க கட்டாயம் வாய்ப்புள்ளதாக தம்பதிகள் நம்புகிறார்கள். இதை 36% தம்பதிகள் முயற்சி செய்தும் பார்க்கிறார்கள்.
நாளொன்றுக்கு பலமுறை உடலுறவு கொள்வதால், கருத்தரிக்க முடியும் என்பது பலரும் கற்பனையான நம்பிக்கையாகும். ஆனால் கருத்தரிக்க முயற்சி செய்யும் போது, ஒரு நாளைக்கு ஒரு முறையே உடலுறுவு வைத்துக்கொள்ள வேண்டும் என நிபுணர்கள் கூறுகின்றனர். இதில் உண்மை என்னெவென்று பார்த்தால், அடிக்கடி தம்பதிகள் செக்ஸ் வைத்துக்கொள்ளும் போது அவர்களின் ஆரோக்கியமான விந்தணுக்களின் எண்ணிக்கையை குறைந்து விடுகிறது. இதனால் 2 நாட்களுக்கு ஒருமுறை செக்ஸ் வைத்துக்கொள்வது அவர்களுக்கு பலனாக அமையும். இம்முறையில் முயற்சிக்கும் தம்பதிகளுக்கு கருத்தரித்தல் விகிதம் அதிகரித்து இருப்பதாகவும் மருத்துவ வல்லுநர்கள் கூறியுள்ளனர்.
இனி வரும் குறிப்பு முக்கியமானது, காரணம் ஒவ்வொரு பெண்களின் உடல்நிலையும் வேறு மாறி இருக்கும். மகளிர்க்கு கரு தங்குவதற்கு அனைத்து நாட்களும் சாதமாக அமையாது. பெண்களின் கருப்பை , அண்டவிடுப்பு, மாதவிடாய் போன்றவற்றை கருத்தில் கொண்டே, உடலுறவை முயற்சிக்க வேண்டும்.
அண்டவிடுப்பிற்கு முன்பாக ஐந்து நாட்கள் மற்றும் அண்டவிடுப்பு நாட்களில் தான் கருப்பை சாதமாக இருக்கும். 28 நாட்கள் தான் அண்டவிடுப்பின் பொதுவான காலமாகும். அதாவது மாதவிடாய் காலம் முடிந்து, 14-ஆவது நாள் இது நடக்கும். இம்முறை மாதவிடாய் சுழற்சி வரும் மத்திய நாட்களில் தான் உருவாகின்றது. மாதவிடாய் வருவதற்கு 4 நாட்களுக்கு முன்போ, இல்லையெனில் 4 நாட்களுக்கு இடையிலோ இது நிகழும். இதன்பின் அண்டவிடுப்பின் போது முட்டை வெளியேறிவிடும். இவை கருப்பை குழாய்க்கு நுழைந்து தேங்கிவிடும்.
இச்சமயத்தில் விந்தணுக்கள் பயணம் செய்து, உள்ளே சென்று காத்திருக்கும் முட்டையால் ஈர்க்கப்படும்.
இந்தக் கருவானது முட்டையாக உருவாகும். இதனால் கர்ப்பம் தரிக்க வாய்ப்புள்ளது. இப்படி செல்லும் விந்தணுக்கள் 5 நாட்கள் உயிர்வாழ்கின்றன.
அண்டவிடுப்பு நாட்களை கணக்கிட நம்பகத்தன்மையுள்ள ஆப்கள் உள்ளது. இல்லையேல் நீங்கள் இதை காலண்டரிலும் குறித்து வைத்துக் கொள்ளலாம். பெண்ணின் சுழற்சியானது மாதவிடாய் முதல் நாளில் துவங்கி, அடுத்த மாதவிடாயின் முதல் நாளுக்கு முன்பு முடிவடைகிறது. 28 நாட்கள் பெண்ணுக்கு மாதவிடாய் சுழற்சி இருந்தால், 14 -ஆவது நாளில் கரு உருவாகும்.
உடலுறவுக்குப் பின் உறங்க வேண்டும்....!
செக்ஸ் வைத்து கொண்டதற்குப்பின் படுக்கையில் 10-15 நிமிடங்கள் உறங்க வேண்டும். காரணம் இது கருப்பை வாயில் விந்தணுக்கள் நுழைவதால், இந்த இயக்கத்தை எளிதாக்குகிறது. உடலுறவு முடிந்த பின் குளிக்க உடனே செல்லக்கூடாது. காரணம் அப்போதுதான் விந்தணுக்கள் எளிதாக கருப்பையை அடையும்.
மது மற்றும் புகைப்பழங்களை தவிர்த்து விடுங்கள்.
உணவு முறையை சரியாக எடுத்துக் கொள்ள வேண்டும்.
எடையைக் குறைக்க வேண்டும். இது பொருத்தமற்றதாக தோன்றினாலும், உடல் எடை அதிகமாக இருப்பவர்கள், எடையை குறைக்கும் போது, கருத்தரிக்கும் வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுக்கும்.
மன அழுத்தத்திலிருந்து இருவரும் விடுபடுங்கள்.
பிறப்பு கட்டுப்பாட்டு மாத்திரைகளை தவிர்த்திடுங்கள்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
DhanaLakshmi
Contact at support@indiaglitz.com
Comments