முதல்வர் பொறுப்பேற்றதும் ஸ்டாலின் போடப்போகும் முதல் கையெழுத்து என்ன?
- IndiaGlitz, [Monday,May 03 2021]
தமிழகத்தில் நடைபெற்று முடிந்த சட்டமன்ற தேர்தலில் திமுக அமோக வெற்றி பெற்றது என்பதும் முதல்முறையாக திமுக தலைவர் முக ஸ்டாலின் அவர்கள் முதல்வராக பொறுப்பேற்க உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. 10 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் திமுக தற்போது பொறுப்பேற்க உள்ளதை அடுத்து மக்களின் எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.
ஏற்கனவே தேர்தல் பிரச்சாரத்தின்போதும், திமுகவின் தேர்தல் அறிக்கையிலும் பல்வேறு நலத்திட்டங்கள், வாக்குறுதிகள் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் அதில் ஸ்டாலினின் முதல் கையெழுத்து எதுவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.
திமுக தேர்தல் அறிக்கையில் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகள் பின்வருமாறு:
நீட் தேர்வு ரத்து
5 சவரன் தங்க நகை கடன்கள் ரத்து
மகளிர் சுய உதவி குழுவின் கடன் தள்ளுபடி
கல்வி கடன் தள்ளுபடி
அரசு வேலைவாய்ப்புகளில் பெண்களுக்கு 40 சதவீத இட ஒதுக்கீடு
முதியோர் உதவி தொகை ஆயிரத்து 500 ரூபாயாக உயர்வு
விலை பொருட்களுக்கு குறைந்த பட்ச ஆதார விலை
பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறைப்பு
ஆவின் பால் லிட்டர் ரூபாய் மூன்று குறைப்பு
பள்ளி மாணவர்களுக்கு காலையில் ஊட்டச்சத்து பால்
தமிழ்நாட்டு வேலை வாய்ப்புகளில் 75% இடம் தமிழருக்கே
மாணவர்களுக்கு கைக்கணினி
ஆலய புனரமைப்பு ரூபாய் 1000 கோடி மசூதி தேவாலயங்கள் சீரமைப்புக்கு ரூபாய் 200 கோடி
மாணவிகளுக்கு இலவச நாப்கின்
புதிய மின் மோட்டார் வாங்க ரூபாய் 10,000 வரை மானியம்
மாதம் ஒருமுறை மின் கட்டணம் செலுத்தும் முறை
அரசு உள்ளூர் பேருந்துகளில் மகளிருக்கு கட்டணமில்லா பயண வசதி
பழைய ஓய்வூதிய திட்டம்
மீனவர்களுக்கு இரண்டு லட்சம் புதிய வீடுகள்
மேற்கண்ட வாக்குறுதிகளில் எந்த வாக்குறுதியை முதலில் நிறைவேற்ற தமிழக முதல்வராக முக ஸ்டாலின் முதல் கையெழுத்தை போடுவார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்