சிவகார்த்திகேயன் படத்துடன் போட்டியா? சந்தானம் விளக்கம்

  • IndiaGlitz, [Monday,December 25 2017]

சிவகார்த்திகேயன் நடித்த 'வேலைக்காரன்' மற்றும் சந்தானம் நடித்த 'சக்க போடு போடு ராஜா' ஆகிய இரண்டு படங்களும் கடந்த வெள்ளியன்று வெளியாகி திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கின்றது. இந்த நிலையில் சிவகார்த்திகேயனுடன் போட்டி போடும் எண்ணத்தில் சந்தானம் படம் வெளியானதா? என்பது குறித்த கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த சந்தானம், சிவகார்த்திகேயனுடன் எந்த போட்டியும் இல்லை. ஒரே நாளில் இரண்டு படங்கள் வெளியாகியுள்ளது. அவ்வளவுதான் என்று கூறினார்

மேலும் இரண்டில் எந்த படம் பெஸ்ட் என்ற கேள்விக்கு பதிலளித்த சந்தானம், நான் மட்டுமில்லை அனைவருமே தாங்கள் வேலை செய்த படம் தான் பெஸ்ட் என்று சொல்வார்கள். அந்த வகையில் தான் நானும் எனது படம் தான் சிறந்தது என்று கூறுவேன்.

ஆனால் அதே நேரத்தில் இரண்டுமே இரண்டு வெவ்வேறு விதமான படங்கள். வேலைக்காரன் மெசேஜ் சொல்லும் படமாகவும், எனது படம் முழுக்க முழுக்க காமெடியாக செல்லும் படமாகவும் உள்ளது' என்று கூறியுள்ளார்.

More News

கொஞ்சம் பார்த்து பண்ணுங்க: தமிழ் ராக்கர்ஸிடம் 'பலூன் இயக்குனர் கோரிக்கை

கோலிவுட் திரையுலக தயாரிப்பாளர்களுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கி வரும் தமிழ் ராக்கர்ஸ் மீது பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்ட

விநியோகிஸ்தர் சங்க தேர்தல்: ஞானவேல்ராஜா தோல்வி

தயாரிப்பாளர் சங்கத்தின் செயலாளர் பதவியில் இருந்து விலகிய பிரபல தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா, சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்ட விநியோகிஸ்தர் சங்க தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்டார்.

சக்கை போடு போட்டதா சந்தானம் படத்தின் வசூல்?

'சக்க போடு போடு ராஜா' திரைப்படம் கடந்த வெள்ளியன்று வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்றபோதிலும் தொடர்ச்சியான விடுமுறை தினங்கள் காரணமாக திருப்திகரமான வசூலையே பெற்றுள்ளது.

சிவகார்த்திகேயனின் 'வேலைக்காரன்' பெற்ற அபார ஓப்பனிங் வசூல்

சிவகார்த்திகேயன், அஜித்-விஜய்க்கு அடுத்த இடத்தை நெருங்கிவிட்டார் என்று ஏற்கனவே கூறப்பட்டு வரும் நிலையில் கடந்த வெள்ளியன்று வெளியான 'வேலைக்காரன்' படத்தின் வசூல் அதை நிரூபிக்கும் வகையில் உள்ளது

தினகரனுக்கு உறுதுணையாக இருப்பேன்: விஷால் அறிக்கை

சென்னை ஆர்.கே நகர் தொகுதியில் ஜெயலலிதா பெற்ற வாக்கு வித்தியாசத்தை விட அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்று அதிமுகவை திணறடித்ததோடு, திமுகவை டெபாசிட் இழக்க வைத்து வெற்றி பெற்றுள்ளார் டிடிவி தினகரன்