கொரோனாவில் இருந்து தப்பித்துக் கொண்ட சில நாடுகள்!!!

  • IndiaGlitz, [Thursday,May 21 2020]

கொரோனா அரக்கன் உலகின் அனைத்து மூலைகளிலும் பரந்து விரிந்து பயமுறுத்தி வந்தாலும் அதன் கோரப்பிடியில் இருந்து உலகில் சில நாடுகள் மற்றும் தீவுகள் தப்பிழைத்துக் கொண்டுதான் இருக்கின்றன. கடந்த டிசம்பர் மாத இறுதியில் கண்டறியப்பட்ட இந்த வைரஸ் பாதிப்பு மிக குறைந்த காலக் கட்டத்திலேயே பெருந்தொற்றாக மாறி உலகம் முழுவதும் பரவியது. பாதிக்கப்பட்ட நபர்களின் சளி போன்ற நீர்த்துளிகளில் இருந்து மற்றொருவருக்கு பரவி கடும் சுவாச நோயை உண்டு பண்ணுவதாகக் கூறப்பட்ட இந்த நோய் தற்போது மனித உடல் உறுப்புகளிலும் பாதிப்பை ஏற்படுத்துவதாகவும் விஞ்ஞானிகள் விளக்கம் அளிக்கின்றனர். மேலும் அதன் மரபணு வரிசையும் தொடர்ந்து மாறிக்கொண்டே வருகிறது.

அதோடு, இந்நோய் புதுப்புது அறிகுறிகளையும் கொண்டிருப்பதாக விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். தற்போது இந்நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு ஒரு மர்மநோய் பாதிப்பு ஏற்படுவதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன. ஹார்டுவேர்டு பல்கலைக் கழகத்தின் தரவுகளின் அடிப்படையில் இந்நோய்த் தொற்று 188 உலக நாடுகளுக்கு பரவி இருப்பதாக தெரிகிறது. மேலும் உலகம் முழுவதும் பாதிக்கப்பட்ட வர்களின் எண்ணிக்கை 50 லட்சத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறது. உயிரிழப்பு 3 லட்சத்து 25 ஆயிரத்தை தாண்டியிருக்கிறது. அதோடு 1 லட்சத்து 80 ஆயிரம் மக்கள் இந்நோயில் இருந்து முழுமையாக குணமடைந்தும் இருக்கின்றனர்.

இந்நிலையில் கொரோனா பாதிப்புகளை குறித்து எந்த அறிவிப்பையும் வெளியிடாத நாடுகளின் பட்டியல்-

Kiribath (கிரிபதி)

Marshall Islands (மார்ஷல் தீவுகள்)

Micronesia (மைக்ரோனேஷியா)

Nauru (நவ்ரூ)

North Korea (வட கொரியா)

Palau (பலாவ்)

Samoa (சமோவா)

Solomon Islands (சாலமன் தீவுகள்)

Tonga (டோங்கா)

Turkmenista (துர்க்மெனிஸ்தான்)

Tuvalu (துவாலு)

Vanuatu (வனடு)

More News

கொரோனா ஊரடங்கில் புதிய 50/30 சுழற்சி முறை: கொரோனாவில் இருந்து மக்களைக் காப்பாற்றுமா???

லண்டனை சேர்ந்த சில பொருளாதார வல்லுநர்கள் கொரோனா ஊரடங்கிற்கு சில மாற்று வழிமுறைகளை கண்டறிந்து வெளியிட்டுள்ளனர்.

நடிப்புலக மேதைக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறிய கமல்ஹாசன்

மலையாள திரைப்படங்களில் மட்டுமின்றி தமிழ் உள்பட பல்வேறு மொழிகளில் தனது அபாரமான நடிப்பை வெளிப்படுத்தி மிகப்பெரிய நடிகர்களாலே நடிப்புலக மேதை

கொரோனாவால் குழந்தைகளுக்கு ஏற்படும் மர்மநோய் இந்தியாவில் முதல் முறையாக பாதிக்கப்பட்ட சென்னை சிறுவன்

கடந்த வாரம் நியூயார்க்கில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை கவாசாகி போன்ற அறிகுறியுள்ள ஒரு நோய் தாக்குவதாக அதிர்ச்சி ஏற்படுத்தும் செய்திகள் வெளியாகியது

கோலிவுட்டில் தொடர்ந்து விஜய் முதலிடம்: அடுத்தடுத்த இடங்களில் யார் யார்?

கோலிவுட் திரையுலகில் மாஸ் நடிகர்களாக அஜித் மற்றும் விஜய் இருந்து வரும் நிலையில் சமீபத்தில் தனியார் நிறுவனம் ஒன்று எடுத்த கருத்துக்கணிப்பில் தளபதி விஜய் தொடர்ந்து

உலக நாடுகளின் கொரோனா நிவாரண நிதி, ஜிடிபி விகிதத்தில் எவ்வளவு தெரியுமா???

லண்டனை சேர்ந்த சில பொருளாதார வல்லுநர்கள் கொரோனா ஊரடங்கிற்கு சில மாற்று வழிமுறைகளை கண்டறிந்து வெளியிட்டுள்ளனர்.