கொரோனாவில் இருந்து தப்பித்துக் கொண்ட சில நாடுகள்!!!
- IndiaGlitz, [Thursday,May 21 2020]
கொரோனா அரக்கன் உலகின் அனைத்து மூலைகளிலும் பரந்து விரிந்து பயமுறுத்தி வந்தாலும் அதன் கோரப்பிடியில் இருந்து உலகில் சில நாடுகள் மற்றும் தீவுகள் தப்பிழைத்துக் கொண்டுதான் இருக்கின்றன. கடந்த டிசம்பர் மாத இறுதியில் கண்டறியப்பட்ட இந்த வைரஸ் பாதிப்பு மிக குறைந்த காலக் கட்டத்திலேயே பெருந்தொற்றாக மாறி உலகம் முழுவதும் பரவியது. பாதிக்கப்பட்ட நபர்களின் சளி போன்ற நீர்த்துளிகளில் இருந்து மற்றொருவருக்கு பரவி கடும் சுவாச நோயை உண்டு பண்ணுவதாகக் கூறப்பட்ட இந்த நோய் தற்போது மனித உடல் உறுப்புகளிலும் பாதிப்பை ஏற்படுத்துவதாகவும் விஞ்ஞானிகள் விளக்கம் அளிக்கின்றனர். மேலும் அதன் மரபணு வரிசையும் தொடர்ந்து மாறிக்கொண்டே வருகிறது.
அதோடு, இந்நோய் புதுப்புது அறிகுறிகளையும் கொண்டிருப்பதாக விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். தற்போது இந்நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு ஒரு மர்மநோய் பாதிப்பு ஏற்படுவதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன. ஹார்டுவேர்டு பல்கலைக் கழகத்தின் தரவுகளின் அடிப்படையில் இந்நோய்த் தொற்று 188 உலக நாடுகளுக்கு பரவி இருப்பதாக தெரிகிறது. மேலும் உலகம் முழுவதும் பாதிக்கப்பட்ட வர்களின் எண்ணிக்கை 50 லட்சத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறது. உயிரிழப்பு 3 லட்சத்து 25 ஆயிரத்தை தாண்டியிருக்கிறது. அதோடு 1 லட்சத்து 80 ஆயிரம் மக்கள் இந்நோயில் இருந்து முழுமையாக குணமடைந்தும் இருக்கின்றனர்.
இந்நிலையில் கொரோனா பாதிப்புகளை குறித்து எந்த அறிவிப்பையும் வெளியிடாத நாடுகளின் பட்டியல்-
Kiribath (கிரிபதி)
Marshall Islands (மார்ஷல் தீவுகள்)
Micronesia (மைக்ரோனேஷியா)
Nauru (நவ்ரூ)
North Korea (வட கொரியா)
Palau (பலாவ்)
Samoa (சமோவா)
Solomon Islands (சாலமன் தீவுகள்)
Tonga (டோங்கா)
Turkmenista (துர்க்மெனிஸ்தான்)
Tuvalu (துவாலு)
Vanuatu (வனடு)