பிக்பாஸ் 6: ஏழு போட்டியாளர்களில் பணப்பெட்டியை யார் எடுக்க வாய்ப்பு?

  • IndiaGlitz, [Monday,January 09 2023]

பிக்பாஸ் நிகழ்ச்சி நிறைவு கட்டத்தில் இருக்கும் நிலையில் இன்னும் ஒரே ஒரு வாரத்திற்கு பின்னர் இறுதி நிகழ்ச்சி நடைபெறும் . இந்த நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடைசி வாரத்தில் பணப்பெட்டி அனுப்பப்படும் என்றும் அந்த பெட்டியை எடுத்துக் கொண்டு ஒரு போட்டியாளர் வெளியேறலாம் என்று அறிவிக்கப்படும் என்பதும் தெரிந்ததே.

ஒவ்வொரு சீசனிலும் ஒரு போட்டியாளர் பணப் பெட்டியை எடுத்துக் கொண்டு வெளியேறி உள்ளார் என்பதும் கடந்த சீசனில் கூட சிபிச்சக்கரவர்த்தி பணப் பெட்டியை எடுத்து வெளியேறினார் என்பது அனைவருக்கும் ஞாபகம் இருக்கும்.

இந்த நிலையில் இந்த வாரம் அனேகமாக பணப்பெட்டி வைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் தற்போது இருக்கும் 7 போட்டியாளர்களில் யார் பணப்பெட்டியை எடுப்பார் என்பது குறித்து பார்வையாளர்கள் மத்தியில் விவாதம் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.

அமுதவாணன் நேரடியாக இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளதால் அவர் பணப்பெட்டி எடுக்க வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது. அதேபோல் விக்ரமன் மற்றும் ஷிவின் ஆகிய இருவரில் ஒருவர்தான் டைட்டில் வின்னர் என்பது அவர்கள் இருக்குமே தெரிந்திருக்கும் என்பதால் இருவருமே பணப்பெட்டியை எடுக்க வாய்ப்பில்லை.

மேலும் மைனா ஏற்கனவே தான் பணப் பெட்டியை எடுத்து கொண்டு வெளியேறப் போவதில்லை என்று கூறியிருந்ததால் அவரையும் இந்த லிஸ்ட்டில் இருந்து நீக்கிவிட்டலாம். அப்படியானால் ஏடிகே, கதிர் மற்றும் அசீம் ஆகிய மூவரில் ஒருவர் மட்டுமே பணப்பெட்டி எடுத்து வாய்ப்பிருக்கிறது.

இந்த மூவரில் அசீம் பணப்பெட்டியை எடுக்க வாய்ப்பு குறைவு என்பதால் ஏடிகே அல்லது கதிரவன் ஆகிய இருவரில் ஒருவர் எடுக்கலாம் என்று கூறப்படுகிறது. ஏற்கனவே ஏடிகே பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் கிடைத்த பணத்தில் தனது பெற்றோருக்கு ஒரு சொந்த வீடு வாங்கிக் கொடுப்பதாக கூறி இருந்ததால் அவர் பணத்தை எடுக்கலாம் என்றும் அதே போல் அவருக்கு கதிரவன் விட்டு கொடுக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.