ரூ.12 லட்சம் பணப்பெட்டியை எடுத்து கொண்டு வெளியேறியது இந்த போட்டியாளரா?
Send us your feedback to audioarticles@vaarta.com
பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த 90 நாட்களுக்கும் மேலாக நடைபெற்று வரும் நிலையில் தற்போது 7 போட்டியாளர்கள் உள்ளனர் என்பதும் இதில் நான்கு போட்டியாளர்கள் இறுதிப்போட்டிக்கு தகுதி பெறுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இந்த வாரம் பணப் பெட்டியை எடுத்துக்கொண்டு வெளியே ஒரு போட்டியாளர் செல்லலாம் என பிக்பாஸ் ஒரு வாய்ப்பை அளித்து உள்ளார் என்பதும் முதலில் மூன்று லட்ச ரூபாய் என்று தொடங்கிய பணப்பெட்டியின் மதிப்பு அதன் பின்னர் 5 லட்சம், 6 லட்சம், 7 லட்சம், 9 லட்சம் என அதிகரித்துக் கொண்டே இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
பணப்பெட்டியின் மதிப்பு அதிகரித்தாலும் பணப்பெட்டியை எடுத்துக்கொண்டு வெளியே செல்ல எந்த போட்டியாளரும் ஆர்வம் காட்டவில்லை என்றாலும் அவற்றின் மதிப்பு இன்னும் உயர்ந்தால் யாராவது ஒரு சில போட்டியாளர்கள் பணப் பெட்டியை எடுக்க முயற்சிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது.
அந்த வகையில் பணப்பெட்டியின் மதிப்பு ரூ.12 லட்சம் என மாறியபோது பிக்பாஸ் சீசன் 5 டைட்டில் வின்னராவார் என்று எதிர்பார்க்கப்பட்டவர்களில் ஒருவரான சிபி, அந்த பெட்டியை எடுத்துக்கொண்டு வெளியேறிவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இது பிக்பாஸ் நிகழ்ச்சியை வழக்கமாக பார்த்து வரும் பார்வையாளர்களுக்கு பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
பண பெட்டியை எடுத்துக்கொண்டு சிபி வெளியேறியது குறித்து நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள் என்பதை கமெண்ட்டில் தெரிவியுங்கள்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com