ஜிபி முத்துவுக்கு பதிலாக இந்த நடிகரா? பிக்பாஸ் வீடே கலவரமாக போகுதா?

பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களில் ஒருவரான ஜிபி முத்து தனது குழந்தை மற்றும் தம்பியை பார்க்காமல் தன்னால் இருக்க முடியாது என கூறி பிக்பாஸ் மற்றும் கமல்ஹாசனுடன் விடைபெற்றுச் சென்று விட்டார் என்பதை ஏற்கனவே பார்த்தோம்.

இந்த நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியை கலகலப்பாக கொண்டு சென்ற ஜிபி முத்து திடீரென வெளியேறியது ரசிகர்களுக்கு பெரும் அதிருப்தியை ஏற்படுத்திய நிலையில் தற்போது ஜிபி முத்துவுக்கு பதிலாக ஒரு கலகலப்பானவரை பிக் பாஸ் வீட்டுக்குள் களமிறக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது.

பிரபல வில்லன் மற்றும் குணச்சித்திர நடிகரான மன்சூரலிகான் தான் ஜிபி முத்துவுக்கு பதிலாக பிக்பாஸ் வீட்டிற்கு செல்ல இருப்பதாக கூறப்படுகிறது. ஏற்கனவே மன்சூர் அலிகான் பிக் பாஸ் போட்டியாளர்களின் பட்டியலில் இருந்த நிலையில் கடைசி கட்டத்தில் அவருடைய பெயர் நீக்கப்பட்டதாக கூறப்பட்டது.

இந்த நிலையில் தற்போது ஜிபி முத்து வெளியேறியதை அடுத்து மன்சூர் அலிகான் களமிறங்க உள்ளதாகவும் இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

மன்சூர் அலிகான் கலகலப்பானவர் மட்டுமின்றி கலகக்காரர் கூட என்பதால் பிக்பாஸ் வீடு அவரது எண்ட்ரியால் என்ன ஆகுமோ என்ற எதிர்பார்ப்பு பார்வையாளர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.
 

More News

தீபாவளி ஸ்பெஷல்: இன்றும், நாளை செம அப்டேட்டுகள்!

 சிவகார்த்திகேயன் நடித்த 'பிரின்ஸ்' மற்றும் கார்த்தி நடித்த 'சர்தார்' ஆகிய இரண்டு திரைப்படங்கள் தீபாவளி விருந்தாக ரசிகர்களுக்கு வெளிவந்துள்ள நிலையில் இன்றும் நாளையும் தீபாவளி விருந்தாக பல

'மாவீரன்' படத்தில் மிஷ்கினுக்கு என்ன கேரக்டர்? அவரே அளித்த பதில்!

சிவகார்த்திகேயன் நடித்த 'பிரின்ஸ்' திரைப்படம் நேற்று முன்தினம் வெளியாகி உள்ள நிலையில் அவர் தற்போது 'மாவீரன்' என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு

பாம்பின் விஷம், நரியின் குறுக்குபுத்தி, சிங்கத்தின் கர்ஜனை: போட்டியாளர்கள் யார் யார்?

 பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய புரமோவில், பாம்பு போல் விஷம் உடையவர், நரியின் நரிபோல் குறுக்கு புத்தி உடையவ,ர் சிங்கம் போல் கர்ஜிப்பவர் யார் யார் என்பது குறித்த கருத்துகணிப்பு

பிக்பாஸ் வீட்டில் நடந்த ரெட்கார்ட் டிராமா.. நடிகை ஸ்ரீப்ரியா கண்டனம்!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் பெண் போட்டியாளரை அவமரியாதையாக பேசிய அசீமை ரெட்கார்ட் கொடுத்து வெளியே அனுப்ப வேண்டும் என ஒட்டு மொத்த பார்வையாளர்கள் வலியுறுத்திய நிலையில் கமல்ஹாசன்

அரை நிர்வாணத்தில் தீபாவளி வாழ்த்து சொன்ன நடிகை: குவியும் கண்டனங்கள்!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான நடிகை அரை நிர்வாணத்தில் தீபாவளி வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்ட வீடியோ பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.