கமல்-ரஜினி: நடுநிலையாளர்கள் ஓட்டு யாருக்கு?
- IndiaGlitz, [Monday,October 29 2018]
அதிமுக, திமுக இல்லாத ஒரு புதிய தலைமை வேண்டும் என்ற எண்ணத்தில் பெரும்பாலான நடுநிலையாளர்கள் உள்ளதால் அவர்களுடைய ஓட்டுக்களை கவரும் வகையில் புதிய தலைவர்கள் செயல்பட்டு வருகின்றனர். குறிப்பாக அரசியல் களத்தில் கமல்ஹாசன் குதித்து விறுவிறுப்பாக களப்பணி செய்து வருகிறார். தமிழகம் முழுவதும் அவரது சுற்றுப்பயணத்திற்கு பெரும் வரவேற்பு கிடைத்து வருகிறது. கமல்ஹாசனை அடுத்து விரைவில் அதிகாரபூர்வமாக கட்சி அறிவிப்பை செய்து களமிறங்கவுள்ளார் ரஜினி.
ஒவ்வொரு கட்சிக்கும் என ஒரு வாக்குவங்கி இருக்கும். அந்த வாக்குகள் சிந்தாமல் சிதறாமல் விழுந்தாலும் நடுநிலையாளர்களின் வாக்குகளே வெற்றி தோல்விகளை தீர்மானிக்கும். அந்த வகையில் நடுநிலையாளர்கள் வாக்குகள் யாருக்கு? கமல்ஹாசனுக்கா? அல்லது ரஜினிக்கா? என்று நமது டுவிட்டர் பக்கத்தில் வைத்த கருத்துக்கணிப்புக்கு கமல்ஹாசனுக்கு 56% வாக்குகளும், ரஜினிகாந்துக்கு 46% வாக்குகளும் கிடைத்துள்ளது. கமல்ஹாசனின் களப்பணி வலுவாக இருப்பதையே இந்த கருத்துக்கணிப்பு நிரூபிக்கின்றது.
இருப்பினும் டுவிட்டரில் ஓட்டு போடும் பெரும்பாலானோர் வாக்குச்சாவடி சென்று ஓட்டுப்போடுவதில்லை என்ற கருத்து நிலவுவதால் உண்மையிலேயே நடுநிலையாளர்கள் ஓட்டு யாருக்கு? என்பதை வரும் 20 தொகுதிகள் இடைத்தேர்தல் முடிவு தெரியும்வரை பொறுமை காப்போம்
Which actor will get common man vote if they contest in coming elections? #IGPoll #kamalhassan #Rajinikanth
— IndiaGlitz - Tamil (@igtamil) October 27, 2018