சென்னை ரசிகர்களுக்கு பிடித்த கெய்க்வாட்: ரஜினி-ருத்ராஜை ஒப்பிட்ட பிரபலம்!
Send us your feedback to audioarticles@vaarta.com
நேற்றைய போட்டியில் ருத்ராஜ் கெய்க்வாட் மிக அபாரமாக விளையாடி சென்னை அணிக்கு வெற்றி தேடித் தந்தார் என்பதை ஏற்கனவே பார்த்தோம். அவர் அடித்த 72 ரன்கள் சென்னையின் வெற்றிக்கு மிகப் பெரும் உதவியாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமன்றி முந்தைய போட்டியிலும் அவர் அரைசதம் அடித்தார் என்பதும் தொடர்ச்சியாக இரண்டு போட்டிகளில் அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்து சென்றதோடு இரண்டு முறை ஆட்டநாயகன் விருதை பெற்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து தனக்கு ஸ்பார்க் உள்ளது என்பதை கெய்க்வாட் நிரூபித்துள்ளார்.
இந்த நிலையில் பிரபல கிரிக்கெட் வர்ணனையாளர் ஹர்ஷா போஸ்லே அவர்கள் தனது டுவிட்டர் பக்கத்தில் ரஜினியுடன் ருத்ராஜ் கெய்க்வாட்டை ஒப்பிட்டு ஒரு பதிவு செய்துள்ளார். அந்த டூவிட்டில் ருத்ராஜோ அல்லது சிவாஜி ராவோ, கெய்க்வாட் என்று முடியும் பெயரை வைத்திருந்தால் சென்னையில் மிகவும் பாப்புலராகலாம் என்று குறிப்பிட்டுள்ளார்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் உண்மையான பெயர் சிவாஜி ராவ் கெய்க்வாட் என்பதும் அவரது பெயரும் கெய்க்வாட் என்பதில் முடிவதை ஹர்ஷா போஸ்லே அந்த டுவிட்டில் குறிப்பிட்டுள்ளதை அடுத்து இந்த டுவிட்டை நெட்டிசன்கள் வைரலாக்கி வருகின்றனர்.
Whether Ruturaj or Shivaji Rao, Gaikwad has always been a popular surname in Chennai!
— Harsha Bhogle (@bhogleharsha) October 29, 2020
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments