WhatsApp மூலம் பணப் பரிமாற்றமா??? ஆச்சர்யமூட்டும் புது அப்டேட்!
- IndiaGlitz, [Friday,November 06 2020]
இந்தியாவில் கொரோனா தாக்கத்தால் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனையைப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மேலும் பேடிஎம் செயலி ஏற்கனவே இந்தியாவில் தடை செய்யப்பட்டு உள்ளது இதனால் தற்போது UPI பணப்பரிமாற்றத்தில் கூகுள் பே, போன் பே போன்ற சில செயலிகள் மட்டுமே இயங்கி வருகின்றன.
அந்த வகையில் புதிதாக WhatsApp Pay எனும் புதிய செயலிக்கு மத்திய அரசு அனுமதி அளித்து இருக்கிறது. இந்த செயலியைப் பயன்படுத்தி மிகத் துரிதமான வேகத்தில் பணப் பரிவர்த்தனையில் ஈடுபட முடியும் எனக் கூறப்படுகிறது. இந்தியாவில் கிட்டத்தட்ட 40 கோடி மக்கள் WhatsApp செயலியைப் பயன்படுத்தி வருகின்றனர். இதனால் WhatsApp Pay செயலிக்கும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைக்கும் எனக் கூறப்படுகிறது.
கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பிருந்தே WhatsApp Pay செயலி குறித்து இந்தியாவில் ஆய்வு செய்யப்பட்டதாகக் கூறப்படும் நிலையில் தற்போது மத்திய அரசின் NPCI அனுமதி வழங்கி இருக்கிறது. இதனால் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனையில் இனி WhatsApp Pay செயலியும் புதிய முத்திரையைப் பதிக்கும் என எதிர்ப்பார்க்கலாம்.