கமல்ஹாசனின் முதல் அரசியல் பொதுக்கூட்டத்தில் திடீர் மாற்றம்
Send us your feedback to audioarticles@vaarta.com
நடிகர் கமல்ஹாசன் வரும் 21ஆம் தேதி தனது அரசியல் கட்சியின் பெயரை இராமநாதபுரத்தில் உள்ள அப்துல்கலாம் இல்லத்தில் அறிவிக்கவுள்ளதாக தெரிவித்துள்ளார். அதுமட்டுமின்றி கமல்ஹாசனின் முதல் அரசியல் கூட்டம் மதுரையில் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் கமல்ஹாசனின் முதல் அரசியல் கூட்டம் மதுரை அரசரடி பகுதியில் நடைபெறவுள்ளதாக ஏற்கனவே தகவல் வெளிவந்தது. ஆனால் தற்போது வந்துள்ள புதிய தகவலின்படி கமல்ஹாசனின் முதல் அரசியல் பொதுக்கூட்டம் மதுரை ஒத்தக்கடை பகுதியில் நடைபெறும் என தெரிகிறது.
பிப்ரவரி 21ஆம் தெதி ஒத்தக்கடை பகுதியில் கமல் பொதுக்கூட்டத்திற்கு அனுமதி கோரி காவல் துறையிடம் மனு அளிக்கப்பட்டுள்ளதாக வெளிவந்துள்ள தகவலில் இருந்து இந்த செய்தி உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த முதல் பொதுக்கூட்டத்தில் தமிழகத்தின் முக்கிய விஐபிக்கள், முன்னாள் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் கமல்ஹாசனின் கட்சியில் இணைய வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments