ஒளிப்பதிவு சீர்திருத்த சட்ட விவகாரத்தில் ரஜினி, விஜய், அஜித் மெளனம் ஏன்? பிரபல இயக்குனர் கேள்வி!
Send us your feedback to audioarticles@vaarta.com
ஒளிப்பதிவு சீர் திருத்த மசோதாவுக்கு எதிராக குரல் கொடுக்காமல் ரஜினி, அஜித், விஜய் மௌனம் காப்பது ஏன்? என பிரபல இயக்குனர் ஒருவர் கேள்வி எழுப்பி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மத்திய அரசு சமீபத்தில் ஒளிப்பதிவு சீர்திருத்த மசோதா கொண்டு வர முயற்சி செய்து வருகிறது. இதனை எதிர்த்து தமிழ் திரையுலகினர் உள்பட இந்திய திரையுலகினர் பலர் குரல் கொடுத்து வருகின்றனர். குறிப்பாக சூர்யா, கார்த்தி, விஷால், கார்த்திக் சுப்புராஜ், ராஜூமுருகன் உள்பட பலர் தங்கள் சமூக வலைதளங்களில் ஒளிப்பதிவு சீர்திருத்த சட்ட மசோதாவுக்கு எதிராக டுவிட்டுகளை பதிவு செய்தனர்.
இந்த நிலையில் இந்த சட்டத்திற்கு எதிராக ரஜினி, அஜித், விஜய் ஆகியோர் குரல் கொடுக்காமல் மௌனமாக இருப்பது ஏன்? என்றும் அனைவரும் ஒருங்கிணைந்து இந்த விஷயத்தில் குரல் கொடுக்க வேண்டும் என்றும் பாலிவுட் திரையுலகினர்களுடன் இணைந்து மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்றும் இயக்குனர் அமீர் தெரிவித்துள்ளார்.
மேலும் சூர்யா இந்த மசோதாவுக்கு எதிராக டுவிட் செய்த போது அவருக்கு எதிராக பாஜக தீர்மானம் இயற்றியது. இந்த தீர்மானத்தை கண்டித்து திரை உலகில் உள்ள ஒரு சங்கம் எதிர்ப்பு தெரிவிக்காதது ஏன்? என்ற கேள்வியையும் இயக்குனர் அமீர் எழுப்பியுள்ளார்.
இயக்குனர் அமீரின் இந்த கருத்தை அடுத்தாவது ரஜினி, அஜீத், விஜய் குரல் கொடுப்பார்களா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments