இருவேறு தடுப்பூசிகளை போட்டுக் கொண்டால் ஆபத்தா? தடுப்பூசியில் கலப்பு அவசியமா?

  • IndiaGlitz, [Monday,June 07 2021]

முன்னதாக முதல் டோஸ் செலுத்திக் கொண்ட கொரோனா தடுப்பூசியே (28 நாட்கள் இடைவெளியில்) அடுத்த முறையும் செலுத்திக் கொள்ள வேண்டும் எனக் கூறி வந்த மருத்துவ உலகம் தற்போது தனது விதிமுறைகளை முற்றிலும் மாற்றிக் கொண்டு இருக்கிறது.

உலகம் முழுவதுமே கொரோனா தடுப்பூசிகளுக்கு தேவை, தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது. இதை சிக்கலை எதிர்கொள்ளும் விதமாக கொரோனா தடுப்பூசியை கலந்து கொடுப்பது குறித்து உலக நாடுகள் முக்கிய முடிவுகளை எடுத்து இருக்கின்றன. இந்த முறையின்படி கொரோனா தடுப்பூசியின் ஒரு டோஸை செலுத்தியப் பின்னர் அடுத்த டோஸை மாற்றி செலுத்தும் நடைமுறை சில நாடுகளில் அமலுக்கு வந்துள்ளது.

கொரோனாவில் மட்டும் அல்ல இதற்கு முன்பு ஃப்ளூ காய்ச்சல் மற்றும் Hepatitis A வுக்கான தடுப்பூசி இதேபோல மாற்றிக் கொடுக்கப்பட்ட வரலாற்றையும் நாம் கடந்து வந்து இருக்கிறோம். அந்த வகையில் கனடா, சீனா, பின்லாந்து, பிரான்ஸ், ரஷ்யா, தென்கொரியா, ஸ்பெயின், ஸ்வீடன், பிரிட்டன், அமெரிக்கா போன்ற நாடுகள் தங்களது தடுப்பூசி கொள்கையில் மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளன.

முதலாவதாக கனடாவில் ஒரு டோஸ் கோவிஷீல்ட் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட ஒரு நபர் இரண்டாவதாக பைசர் அல்லது மாடர்னா கொரோனா தடுப்பூசியைச் செலுத்திக் கொள்ளுமாறு அந்நாட்டு தேசிய தடுப்பூசி ஆலோசனை குழு பரிந்துரை செய்து இருக்கிறது. இப்படி செலுத்திக் கொள்வதால் ஏற்படும் மாற்றங்களைக் குறித்து பிரிட்டன் மற்றும் ஸ்பெயின் போன்ற நாடுகளில் ஆய்வுகள் மேற்கொள்ளப் பட்டதாகவும் அந்த ஆய்வுகளில் ஒரு நபருக்கு தடுப்பூசியை கலந்து கொடுப்பது பாதுகாப்பானது என்றும் திறன் வாய்ந்தது என்றும் கூறப்பட்டு இருக்கிறது.

இதனால் தடுப்பூசியை கலந்து கொடுக்கும் கொள்கைளை தற்போது பல நாடுகள் அமலுக்கு கொண்டு வந்து இருக்கின்றன. இந்தியாவும் இதுகுறித்த ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறது. மேலும் இதனால் தடுப்பூசியில் ஏற்படும் தட்டுப்பாடுகளை குறைக்க முடியும். அதோடு இங்கிலாந்தின் அஸ்ட்ராஜெனா உருவாக்கிய கோவிஷீல்டு கொரோனா தடுப்பூசி பல நாடுகளில் ரத்த உறைவுகளை ஏற்படுத்தி இருக்கிறது. இதனால் பின்லாந்து, பிரான்ஸ், நார்வே, ஸ்பெய்ன், சுவீடன் போன்ற நாடுகளில் கோவிஷீல்டு கொரோனா தடுப்பூசிக்கு இடைக்காலத்தடை விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதுபோன்ற நிலைமைகளில் கொரோனா தடுப்பூசியை கலந்து கொடுப்பது குறித்து விஞ்ஞானிகள் ஆய்வு மேற்கொண்டனர். மேலும் இப்படி செலுத்துவதால் பக்க விளைவுகள் ஏற்படுமா என்பது குறித்து ஸ்பெயின் நாட்டில் கால்கோர்ஸ் எனும் திட்டத்தை வகுத்து ஆய்வும் மேற்கொள்ளப்பட்டது. அந்த ஆய்வில் 143 பேருக்கு முதலில் கோவிஷீல்டு அடுத்த 28 நாட்களில் கோவேக்சின் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டதாகவும் அதன் முடிவு சிறந்த செயல்திறனை கொண்டாதாக மாறியுள்ளது என்றும் கூறப்படுகிறது.

மேலும் தடுப்பூசிகளை கலந்து கொடுத்தால் ஆபத்தானது என எந்த அறிவியல் கோட்பாடுகள் இதுவரை கூறவில்லை. இந்த அடிப்படையில் தற்போது உலகம் முழுவதும் கலப்பு தடுப்பூசி குறித்த விவாதங்கள் சூடுபிடித்து இருக்கின்றன. மேலும் ரஷ்யாவின் கமலயா நிறுவனம், ஆக்ஸ்போட்டின் அஸ்ட்ராஜெனகா போன்ற நிறுவனங்கள் கலப்பு தடுப்பூசி குறித்த இறுதிகட்ட ஆய்வை மேற்கொண்டு வருகின்றன.

இந்த ஆய்வுகளில் இருவேறு தடுப்பூசிகள் செலுத்தும்போது பொதுவா நோய் எதிர்ப்பை வலுப்படுத்துவது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. அதிலும் கோவிஷீல்ட் தடுப்பூசியை செலுத்திக் கொண்ட நபருக்கு இரண்டாவது முறையாக பைசர் தடுப்பூசி செலுத்தும்போது அதன் செயல்திறன் அதிகமாக இருப்பதாகவும் இதனால் பக்க விளைவுகள் எதுவும் இல்லை என்றும் விஞ்ஞானிகள் தெளிவுப்படுத்தி உள்ளனர்.

தற்போது தடுப்பூசி கலப்பு குறித்து இந்திய அரசு தீவிர ஆலோசனை மேற்கொண்டு வருகிறது. உள்நாட்டு தயாரிப்பான கோவேக்சின் பாரம்பரிய அடிப்படையில் இறந்த கொரோனா வைரஸால் உருவாக்கப்பட்டது. கோவிஷீல்ட் அடினோவைரஸின் மென் வடிவத்தை கொரோனா வைரஸின் தோற்றத்தைப் பிரதிபலிக்குமாறு உருவாக்கப்ப்டடு உள்ளது. இதன் மாற்றப்பட்ட வடிவம் உடலுக்கு எந்த ஆபத்தையும் விளைவிக்காது எனக் கூறப்படுகிறது. இதனால் இந்த இரு தடுப்பூசிகளை கலந்து கொடுப்பது குறித்து இந்தியாவில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

ஏற்கனவே உத்திரப்பிரதேச கிராமம் ஒன்றில் 20 பேருக்கு முதல் டோஸ் கோவிஷீல்ட் கொரோனா தடுப்பூசியும் இரண்டாவது முறை கோவேக்சின் கொரோனா தடுப்பூசியும் செலுத்தப்பட்டது. இதனால் அவர்களுக்கு எந்த பக்கவிளைவுகளும் ஏற்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

More News

'மாரி 2' நடிகர் குழந்தையின் முதல் பிறந்த நாள் கொண்டாட்டம்: வைரலாகும் குடும்ப புகைப்படம்!

தனுஷ் நடித்த 'மாரி 2' திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்த நடிகரின் குழந்தைக்கு முதலாவது பிறந்த நாள் கொண்டாட்டம் நடைபெற்றதை அடுத்து அது குறித்த புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது

ஓவியர் இளையராஜா கொரோனாவால் உயிரிழப்பு: திரையுலக பிரபலங்கள் இரங்கல்!

தத்ரூபமாக ஓவியம் வரையும் ஓவிய கலைஞரான இளையராஜா கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்த செய்தி திரையுலக பிரபலங்களையும் ஓவிய கலைஞர்களையும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது 

தடுப்பூசி போட்டவுடன் ஏ.ஆர்.ரஹ்மான் எடுத்த செல்பி: இணையதளத்தில் வைரல்!

கொரோனா வைரஸ் தடுப்பூசி போட்டுக் கொண்ட இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் தனது மகனுடன் எடுத்த செல்பி புகைப்படத்தை பதிவு செய்த நிலையில் அந்த புகைப்படம் தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

நாட்படு தேறல் தேறல்....! வைரமுத்து-வின் மனதை ரணமாக்கும் தாலாட்டு பாடல்....!

நாட்படு தேறல் தேறல்....! வைரமுத்து-வின் மனதை ரணமாக்கும் தாலாட்டு

அந்த காட்சியைப் பார்த்து எனக்குக் கண்ணீரே வந்து விட்டது: கவிஞர் தாமரையின் உணர்ச்சிபூர்வ பதிவு!

சென்னை மாநகராட்சியில் 'தமிழ் வாழ்க' என்ற பெயர் பலகையை மீண்டும் பார்த்தவுடன் எனக்கு கண்ணீரே வந்துவிட்டது என கவிஞர் தாமரை தனது பேஸ்புக்கில் உணர்ச்சிபூர்வமான பதிவு ஒன்றை பதிவு செய்துள்ளார்