காஜல் அகர்வால் ஹனிமூன் சென்ற நாடு இதுதான்! வைரலாகும் புகைப்படங்கள்!
- IndiaGlitz, [Sunday,November 08 2020]
சமீபத்தில் பிரபல நடிகை காஜல் அகர்வால், கௌதம் என்ற மும்பை தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டார் என்பதும் திருமணத்திற்குப் பின்னர் அவர் ’கார்வா செளத்’ என்ற சடங்கில் கலந்து கொண்டார் என்பதும் தெரிந்ததே
மேலும் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் கணவருடன் காஜல் அகர்வால் ஹனிமூன் சென்றார் என்பது அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து வெளியான புகைப்படங்களில் இருந்து தெரிய வந்தது. இருப்பினும் அவர் எந்த நாட்டிற்கும் ஹனிமூன் சென்றுள்ளார் என்பது குறித்த தகவல் வெளிவரவில்லை
இந்த நிலையில் தற்போது காஜல் அகர்வாலின் கணவர் கௌதம் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ள புகைப்படங்களை வைத்து கௌதம்-காஜல் காதல் தம்பதிகள் மாலத்தீவுக்குத்தான் ஹனிமூன் சென்றுள்ளனர் என்பது தெரியவந்துள்ளது
கௌதம் தனது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்த பல இடங்கள் மாலத்தீவை சேர்ந்தது என்பதால் அவர்கள் இருவரும் மாலத்தீவில் தான் தற்போது ஹனிமூன் கொண்டாடி வருகின்றனர் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது கௌதம் பதிவு செய்த இன்ஸ்டாகிராம் புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது