அண்டை மாநிலங்களில் திறக்கப்பட்ட திரையரங்குகள்: தமிழகத்தில் எப்போது?
- IndiaGlitz, [Sunday,July 18 2021]
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த சில மாதங்களாக தமிழகத்தில் திரையரங்குகள் திறக்கப்படாததால் பல திரைப்படங்கள் ரிலீஸ் செய்ய முடியாமல் உள்ளன என்பதும் ஒரு சில திரைப்படங்கள் வேறு வழி இல்லாமல் ஓடிடியில் ரிலீஸ் ஆகி வருகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் தமிழகத்தின் அண்டை மாநிலங்களில் தற்போது திரையரங்குகள் திறக்கப்பட்டு வரும் நிலையில் விரைவில் தமிழகத்திலும் திரையரங்குகள் திறக்க அனுமதி கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஏற்கனவே ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் திரையரங்குகள் 50 சதவீத பார்வையாளர்களுடன் திறக்க அனுமதிக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் நாளை முதல் கர்நாடக மாநிலத்திலும் திரையரங்குகள் திறக்கப்பட அனுமதிக்கப்பட்டு உள்ளது என்பதும் 50 சதவீத பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது. இதனை அடுத்து தெலுங்கு மற்றும் கன்னட படங்கள் ஒவ்வொன்றாக ரிலீஸ் செய்ய வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது.
இந்த நிலையில் தமிழகம், கேரளா மற்றும் பாண்டிச்சேரி ஆகிய மாநிலங்களிலும் விரைவில் திரையரங்குகள் திறக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. அனேகமாக ஆகஸ்ட் மத்தியில் அல்லது இறுதியில் தமிழகத்திலும், அதனை அடுத்து கேரளாவிலும் திரையரங்குகளில் திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.