ரஜினி சென்னை திரும்பும் தேதி குறித்த தகவல்

  • IndiaGlitz, [Monday,June 20 2016]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடல்நிலை குறித்து கடந்த வாரம் ஒரு வதந்தி கிளம்பியது என்பதையும் அந்த வதந்திக்கு ரஜினியின் குடும்பத்தினர் மறுப்பு தெரிவித்ததையும் ஏற்கனவே பார்த்தோம். இந்நிலையில் வதந்தியை தவிடு பொடியாக்கும் வகையில் ரஜினிகாந்த் விரைவில் சென்னை திரும்பவுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.


அனேகமாக அவர் ஜூலை 3ஆம் தேதி சென்னை திரும்புவார் என்றும் அதன் பின்னர் 'கபாலி' படத்தின் அதிகாரபூர்வ ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது. மேலும் ரஜினியின் வருகைக்காகவே '2.0' படக்குழுவினர் காத்திருப்பதாகவும் அவர் சென்னை திரும்பியவுடன் '2.0' படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு தொடங்கிவிடும் என்றும் கூறப்படுகிறது.

இந்நிலையில் 'கபாலி' படத்தின் போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகள் முழுவீச்சில் இரவுபகலாக நடைபெற்று வருகிறது.