கொரோனா நிவாரணம் எப்பொழுது வழங்கப்படும்....? கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியசாமி அறிவிப்பு...!
Send us your feedback to audioarticles@vaarta.com
கொரோனா நிவாரண நிதி வரும் மே-15-ஆம் தேதி முதல் வழங்கப்படும் என கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியசாமி தெரிவித்துள்ளார்.
தமிழக முதலமைச்சராக முக.ஸ்டாலின் அவர்கள் பதவியேற்றவுடன், முக்கியமான 5 கோப்புகளில் அவர் கையெழுத்திட்டார். அதில் முதலில் கையெழுத்திட்டது ரேஷன் அட்டைதாரர்களுக்கு கொரோனா நிவாரண நிதி வழங்குதல் என்ற திட்டம் தான். அதை நிறைவேற்றும் வகையில் வரும் மே-15-ஆம் தேதி முதல் தவணையாக கொரோனா நிதியை ரூ.2000 வழங்கவுள்ளதாக, கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார்.
கொரோனா நிவாரண தொகையாக ரூ.4000-த்தை வழங்குவோம் என ஸ்டாலின் தனது அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார். இந்த நிலையில் தலைமைச்செயலத்தில் இந்த திட்டத்தை இன்று துவங்கி வைத்தார் முதல்வர் ஸ்டாலின். ரேஷன் கார்டு வைத்திருக்கும் குடும்பத்தினருக்கு, இன்றுமுதல் நிவாரண நிதிக்கான டோக்கனை நியாய விலை கடை அதிகாரிகள் வீடிதேடிச்சென்று கொடுத்து வருகிறார்கள். நாளொன்றுக்கு 200 வீடுகளுக்கு டோக்கனை கொடுத்து வருகிறார்கள். ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால் காலை 8 மணி முதல் மதியம் 12 மணி வர மட்டுமே டோக்கன்களை தருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியசாமி டுவிட்டரில் கூறியிருப்பதாவது,
"மே 15ம் தேதி முதல் ரேஷன் கடைகளில் கொரோனா நிவாரண தொக்கையின் முதல் தவணையாக ரூ.2,000 வழங்கப்படும்!" என கூறியுள்ளார்.
இதேபோல் வரும் 15-ம் தேதி முதல் நாளுக்கு 200 பேர் வீதம், காலை 8 மணி முதல் 12 மணி வரை நிவாரணத்தொகை வழங்கப்படும். மக்கள் ரேஷன் கடைகளுக்கு சென்று இதை பெற்றுக்கொள்ளலாம் என்றும், இந்த திட்டத்தால் சுமார் 2.07 கோடி மக்கள் பயனடைவார்கள் என்றும் கூட்டுறவுத்துறை அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout